கவாசாகி போன்றிருக்கும் கபிரா மொபிலிட்டி பைக்குகள்! முன்பதிவுகளில் அசத்தல்!

Author: Dhivagar
9 March 2021, 10:09 am
Kabira Mobility KM3000 and KM4000 receive over 6000 bookings
Quick Share

கோவாவை தளமாகக் கொண்ட கபிரா மொபிலிட்டி தனது இரண்டு மின்சார மோட்டார் சைக்கிள்களான KM3000 மற்றும் KM4000 பைக்குகளைக் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இப்போது, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மொத்தமாக 6,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிறுவனம் பெற்றுள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபிரா மொபிலிட்டி 2021 மே 1 முதல் டெலிவரிகளைத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மிக உயர்ந்த விலையிலான கவாசாகி நிஞ்ஜா 300 பைக்கை ஒத்திருக்கும் KM3000 மாடலின் விலை ரூ.1,26,990 ஆக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது மற்றும் கவாசாகி Z1000 இலிருந்து ஈர்க்கப்பட்ட KM4000 விலை ரூ.1,36,990 ஆகும். 

இவை இரண்டும் முறையே 6 kW மோட்டார் மற்றும் 8 kW மோட்டார் உடன் இயக்கப்படுகின்றன. இந்த மோட்டார்கள் 4.0 kW மற்றும் 4.4 kW பேட்டரிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, அவை 150 கிமீ (KM4000) வரை பயண வரம்பை வழங்குகின்றன. 

இப்போது KM3000 எலக்ட்ரிக் பைக்கானது  மணிக்கு 100km வேகத்தில் செல்லக்கூடியது என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் KM4000 எலக்ட்ரிக் பைக் மணிக்கு 120km வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 90

0

0