குறிப்பிட்ட மாடல்களில் ரூ.50,000 வரை தள்ளுபடி! கவாசாகி நிறுவனம் அறிவிப்பு

7 April 2021, 7:09 pm
Kawasaki offering discounts up to Rs 50,000 on select models
Quick Share

கவாசாகி இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் அதிக அளவில் ரொக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் வல்கன் S, வெர்சிஸ் 650, W800 மற்றும் நிஞ்ஜா 1000 SX ஆகியவை அடங்கும். இந்த சாலை மாதிரிகளைத் தவிர, ஆஃப் ரோடு மாடல்களான கவாசாகி KX100, KLX 110 மற்றும் KLX 140 உள்ளிட்ட பைக்குகளின் விலையையும் குறைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த தள்ளுபடிகள் 2021 ஏப்ரல் 30 வரை செல்லுபடியாகும், மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கவாசாகி டீலர்களிடமும் இதைப் பெறலாம்.

விலை குறைப்பு  பட்டியல்:

Kawasaki offering discounts up to Rs 50,000 on select models

மேலுள்ள அட்டவணையின்படி, வல்கன் S குரூசர் மாடல் குறைந்த பட்சமாக ரூ.20,000 தள்ளுபடி பெறுகிறது. அதேசமயம், கவாசாகி KX 100 மிக உயர்ந்த சலுகையுடன் ரூ.50,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல உற்பத்தியாளர்களைப் போலவே, கவாசகியும் 2021 ஏப்ரல் 1 முதல் பல மாடல்களின் விலையை அதிகரித்துள்ளது. 

Views: - 0

0

0

Leave a Reply