ஃபயர்பாக்ஸின் இந்த புது அம்சத்தை நீங்கள் ஆஃப் செய்து வைப்பதே நல்லது!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2021, 2:30 pm
Quick Share

ஃபயர்பாக்ஸ் அதன் ஃபயர்பாக்ஸ் சஜஸ்ட் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது அட்ரஸ் பாரில் வலைத்தள பரிந்துரைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஃபயர்பாக்ஸின் சமீபத்திய 93.0 புதுப்பிப்பு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தும். இது ஸ்பான்சர் செய்யப்பட்ட அட்ரஸ் பாரில் பரிந்துரைகளை அதன் பிரவுசரில் கொண்டு வரும்.

இதன் பொருள் என்னவென்றால், அட்ரஸ் பாரில் உள்ள பயனரின் தேடல்களின் அடிப்படையில் மொஸில்லா அதன் பார்ட்னர்களிடமிருந்து உள்ளடக்கத்தைக் காண்பிக்கும். அனைத்து வழக்கமான தேடல் பரிந்துரைகளுக்கும் அடுத்ததாக விளம்பர இணைப்புகள் தோன்றும்.

இணையம் ஏற்கனவே விளம்பரங்களால் நிரம்பியுள்ளது மற்றும் இந்த விளம்பரங்களை அட்ரஸ் பாரில் சேர்ப்பது பலருக்கு எரிச்சலைத் தரலாம். மொஸில்லா இந்த அம்சத்தை ஃபயர்பாக்ஸ் சஜஸ்ட் என்று அழைக்கிறது.
இந்த தொடர்புடைய பரிந்துரைகள் “நீங்கள் தேடுவதன் அடிப்படையில் நம்பகமான பார்ட்னர்களிடமிருந்து” வருகின்றன.

நீங்கள் சமீபத்திய பதிப்பைப் புதுப்பித்த பிறகு, ஃபயர்பாக்ஸ் பரிந்துரையை இயக்குமாறு கேட்டு பிரவுசர் உங்களுக்கு ஒரு செய்தி அறிவிப்பை அனுப்பும்.

இந்த பரிந்துரைகளை நீங்கள் இயக்க விரும்பினால், அனுபவத்தை காண்பிக்க மற்றும் பரிந்துரைகளின் வகைகளைத் தனிப்பயனாக்க, ‘அலவ் சஜஷன்ஸ்’ என்பதைத் தட்டவும் அல்லது ‘கஸ்டமைஸ் இன் செட்டிங்ஸ்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

நிறுவனம் தனது பயனர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட முடிவுகளை வழங்குவதற்காக adMarketplace உடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, நீங்கள் அம்சத்தை முடக்க விரும்பினாலும் அதைச் செய்யலாம்.

ஃபயர்பாக்ஸில் ஸ்பான்சர் செய்யப்பட்ட பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது?

  1. ஃபயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கவும்
  2. மேல் மெனு பட்டனை கிளிக் செய்யவும்
  3. செட்டிங்ஸ்> பிரைவசி அன்டு செக்யூரிட்டி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அட்ரஸ் பார் விருப்பங்களைப் பார்வையிடவும்
  5. ஃபயர்பாக்ஸ் பரிந்துரை (Firefox suggest) பகுதிக்குச் செல்லவும்
  6. அம்சத்தை இயக்க அல்லது முடக்க, Contextual Suggestionsக்கு அடுத்துள்ள செக்பாக்ஸை செலக்ட் அல்லது டீசெலக்ட் செய்யவும்.
  7. Traditional Address bar suggestionsகளை இயக்க அல்லது முடக்க, தொடர்புடைய செக்பாக்ஸ்களைத் செலக்ட் அல்லது டீசெலக்ட் செய்யவும்.

Views: - 599

0

0