வாட்ஸ்அப்பில் உங்களை பிளாக் செய்த ஒருவருக்கு மெசேஜ் செய்வது எப்படி?

30 September 2020, 12:52 pm
Know how to message someone who blocked you on WhatsApp
Quick Share

வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களைப் பிளாக் செய்த பயனருக்கு நீங்கள் மெசேஜ் அனுப்புவதற்கான வழியைத் தான் இன்று நாங்கள் சொல்லப்போகிறோம்.

வாட்ஸ்அப்பில் உங்களைப் பிளாக் செய்த நபருக்கு ஒரு செய்தியை அனுப்ப உங்களுக்கும் மற்றும் உங்களைப் பிளாக் செய்தவருக்கும் பொதுவான நண்பராக இருக்கும் ஒருவரின் உதவியை நாட வேண்டும்.

முதலில் உங்கள் மூவரையும் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க சொல்லி உங்கள் பொதுவான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் நீங்கள் கேட்க வேண்டும், அதில் அவர்கள் உங்களையும் உங்களைப் பிளாக் செய்த நபரையும்  பொதுவான நபர் இணைக்க முடியும்.

அதன்பிறகு, உங்கள் இருக்கும் பொதுவாக இருக்கும் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் அந்த குழுவிலிருந்து வெளியேறி விடுவார். இப்போது நீங்களும் உங்களைப் பிளாக் செய்த நபரும் தான் அந்தக் குழுவில் இருப்பீர்கள்.

இப்போது நீங்கள் இந்த குழுவிற்கு ஒரு செய்தியை அனுப்பலாம் மற்றும் உங்களை முதலில் பிளாக் செய்த நபருடன் பேசலாம். அவ்வளவுதான், இனிமேல் உங்களை ஒருவர் பிளாக் செய்து விட்டால் கப்பல் கவிழ்ந்தது போல் கவலைப்பட வேண்டாம்.

கடந்த கால அறிக்கையில் வாட்ஸ்அப் விரைவில் v2.20.196.8 பீட்டா பதிப்பை வெளியிடப் போகிறது என்றும், பதிப்பு நுகர்வோர் பல சாதனங்களில் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்றும் கூறியுள்ளது. புதிய அம்சத்தை வாட்ஸ்அப்பில் ‘இணைக்கப்பட்ட சாதனங்கள்’ (Linked Devices) என்ற பெயரில் சேர்க்கலாம். நீங்கள் ஒரே நேரத்தில் 4 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தவும் முடியும்.

Views: - 9

0

0