போலீஸ் வண்டிகளில் இருக்கும் லைட் ஏன் சிவப்பு மற்றும் ப்ளூ கலரில் இருக்கு?

1 February 2021, 6:05 pm
KNOW WHY POLICE LIGHTS ARE RED AND BLUE INSTEAD OF JUST RED!
Quick Share

சிவப்பு மற்றும் நீல ஒளியுடன் மட்டுமே போலீஸ் வாகனங்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். எவ்வளளோ கலரில் லைட்டுகள் இருந்தும் இந்த கலர்களை ஏன் தேர்வு செய்தார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு வேளை உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால்  அதற்கான பதிலை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

போலீஸ் வாகனத்தின் நோக்கம் மக்களிடத்தில் ஒரு எச்சரிக்கையை உருவாக்குவதாகும். இயற்கையில், சிவப்பு என்பது ஒரு எச்சரிக்கை நிறம். அதனால்தான் டிராஃபிக் நிறுத்த அறிகுறிகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. சிவப்பு என்பது விழிப்புணர்வு, எச்சரிக்கை, கவனம் செலுத்துதல், அவசரம் மற்றும் முன்னறிந்து செயல்படுதல் போன்றவற்றை குறிக்கும் ஒரு வண்ணம். அதனால் போலீஸ் கார்களின் ஒளியைக் காணும்போது மக்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சிவப்பு நிற விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் களில் சிவப்பு நிறம் இருக்கவும் இதுவே காரணம் ஆகும். சரி, கூடவே ஏன் நீல நிறம் இருக்க வேண்டும்.

வாகனத்தின் ஹெட்லேம்பில் உள்ள வெள்ளை லைட், மூடுபனி விளக்கின் மஞ்சள் ஒளி மற்றும் டெயில் லைட்டின் சிவப்பு விளக்கு போன்ற பல வண்ணங்களை சாலையில் காண்கிறோம். ஆனால் நீல ஒளியை நாம் அதிகம் காண்பதில்லை. எனவே, போலீஸ் வாகனங்களின் சிவப்பு விளக்கு மற்ற வாகனங்களின் டெயில் லைட் உடன் கலப்பதைத் தடுக்க, கூடுதல் நீல நிற வெளிச்சம் சேர்க்கப்பட்டு, அது தனித்து தெரிய செய்கிறது. சாலைகளில் நீல ஒளி அதிகம் காணப்படாததால், இந்த ஒளி கூடுதல் வண்ணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அவசர உணர்வு சிவப்பு ஒளியால் உருவாக்கப்படுகிறது, மேலும் அது தனித்து நிற்க, நீல ஒளியும் சேர்க்கப்படுகிறது. மேலும், பகலில் சிவப்பு விளக்குகள் பார்ப்பது எளிது என்றும், இரவில் நீல விளக்குகள் தெரியும் வாய்ப்பு அதிகம் என்ற கோட்பாடும் உள்ளது. இந்த கோட்பாட்டின் படி, நீலம் மற்றும் சிவப்பு ஒளிரும் விளக்குகள் அதிகம் பயன்படுத்தபடுகின்றன.

கூடுதலாக, சில வல்லுநர்கள் சிவப்பு மற்றும் நீல விளக்குகள் இரண்டையும் பயன்படுத்துவதால் Color blind என்று சொல்லக்கூடிய பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த விளக்குகளால் சிக்கல் இருக்காது என்று கூறுகிறார்கள். சிவப்பு நிறத்தைப் பார்ப்பதில் சிக்கல் இருந்தாலும் பெரும்பாலும் நீல நிறத்தைப் பார்ப்பதில் சிக்கல் இருக்காது. எனவே, சிவப்பு மற்றும் நீல விளக்குகள் இரண்டையும் பயன்படுத்துவது அனைவரையும் எச்சரிக்க உதவுகிறது

Views: - 27

0

0