பிளாஸ்டிக் நாற்காலிகள் /ஸ்டூல்களின் நடுவில் துளை இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

26 January 2021, 10:17 am
KNOW WHY THERE IS A HOLE IN PLASTIC STOOLS
Quick Share

நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகளின் தேவை கண்டிப்பாக அகற்ற முடியாத ஒன்று என்று சொல்லலாம். என்னதான் அலுவலகங்களில் ரோலிங் நாற்காலிகள் இருந்தாலும், கல்யாண மாண்டபம் முதல் நம்ம ஊர் கையேந்திபவன் வரை அதிகம் பயன்பாட்டில் இருப்பது சாதாரண பிளாஸ்டிக் சேர் தான். அந்த நாற்காலிகளில் கீழுள்ள நான்கு கால்களும் L வடிவமைப்பும் எதற்கென்று கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் அமரும் போது வளையாமல் திடமாக நிற்கவே அவை அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், நாற்காலியின் நடுவே ஒரு துளை இருக்கிறதே அது எதற்கென்று தெரியுமா உங்களுக்கு? பெரும்பாலும் நடுவில் தான் இந்த துளை இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா? உங்களுக்கு தெரியாதென்றால் தெரிந்துக்கொள்வோம் வாங்க.

இந்த வடிவமைப்பிற்கு முக்கியமாக சில காரணங்கள் உள்ளன!

1.) நாற்காலியின் நடுவே துளைகள் எதுவும் இல்லை என்றால், இரண்டு நாற்காலிகள் இடைவெளியில் உருவாகும் “வெற்றிடம்” காரணமாக ஏற்படும் காற்று அழுத்தத்தின் காரணமாக நாற்காலிகள் அடுக்கி வைக்கப்படும் போது சிக்கிக்கொள்ளும். அதை தனியே பிரிப்பது கஷ்டமாக இருக்கும். இது போன்ற துளைகள் இருக்கும் போது, வெற்றிடம் உருவாகாது. நாற்காலிகள் ஒன்றன்மீது ஒன்று அடுக்கியிருந்தாலும், அதை சுலபமாக எடுத்துவிடலாம். 

2.) இது பொருட்களை மிச்சப்படுத்தவும், குறைந்த பணத்தில் ஒரே நேரத்தில் அதிக நாற்காலிகள் / ஸ்டூல்களை உருவாக்கவும் உதவுகிறது.

3.) நாற்காலிகள் / ஸ்டூல்களை மிக எளிதாக நகர்த்தவும் அடுக்கி வைத்து சுலபமாக பிரித்தெடுக்கவும் இது உதவியாக இருக்கும்.

4.) அதே போல் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் சதுர வடிவிலோ முக்கோண வடிவிலோ இல்லாமல் வட்டமாகத்தான் இருக்கும். அதற்கான காரணம் யாதெனில் Structural integrity என்று சொல்லக்கூடிய கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிப்பதற்காகவே ஆகும். கட்டமைப்பு ஒருமைப்பாடு சீராக இருக்கும்போது நீங்கள் அமரும்போது நாற்காலி நன்றாக தாங்கும். எளிதில் உடைந்துவிடாது.

மேலும், பிளாஸ்டிக் கடினமானது. அதிக எடை கொண்ட ஒருவர் அதன் மீது அமரும்போது, ​​பிளாஸ்டிக் எல்லா திசைகளிலும் விரிவடையும், மற்றும் துளை பலவீனமான நீட்டிப்புக்கு இடமளிக்கும். இதன் காரணமாக நாற்காலி உடையாமல் இருக்கும்.

Views: - 10

0

0