சரமாரியாக விலை உயர்ந்தது கேடிஎம் 250 டியூக்! பஜாஜ் டொமினார் 250 ஐ விட இவ்ளோ அதிகமா?!

9 July 2021, 1:54 pm
KTM 250 Duke prices hiked
Quick Share

250 டியூக் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் சைக்கிள்களின் விலையையும் ஜூலை 1 முதல் கேடிஎம் நிறுவனம் அதிகரித்துள்ளது. முன்பு ரூ.2,21,888 ஆக விலை இருந்த 250 டியூக் மோட்டார் சைக்கிளின் விலை ரூ.6,848 உயர்வுப்பெற்று இப்போது ரூ.2,28,736 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டார்க் கால்வானோ மற்றும் மெட்டாலிக் சில்வர் வண்ண விருப்பங்கள் இரண்டுக்குமே இந்த விலை உயர்வு கிடைத்துள்ளது.

விலை உயர்வு இருந்த போதிலும், KTM 250 டியூக்கில் எந்த மாற்றங்களும் இல்லை. இது 390 டியூக் பைக்கில் இருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்புடன் 249 சிசி, ஒற்றை சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் உடன் 29.6 bhp மற்றும் 24 Nm திருப்புவிசையை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. 

ஹஸ்குவர்னா 250 போன்ற பைக்குகளில் விலை உயர்வுக் கணிசமானதாக இருந்தபோதிலும், கேடிஎம் 250 டியூக்கிற்கு மிகப்பெரிய விலை உயர்வு கிடைத்துள்ளது. பஜாஜ் டொமினார் 250 மாடலை விட 74,000 ரூபாயும், சுசுகி ஜிக்ஸ்சர் 250 மாடலை விட சுமார் 57,000 ரூபாயும் கூடுதல் விலைக் கொண்டுள்ளது இந்த கேடிஎம் 250 டியூக்.

Views: - 246

0

0