2020 இன் கடைசி சந்திர கிரகணம்: இந்த சந்திர கிரகணத்தை பார்ப்பது எப்படி?

29 November 2020, 8:34 am
பார்ப்பது
Quick Share

நவம்பர் மாத இறுதிக்கே வந்துவிட்டோம், அதனுடன், இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கும் தயாராகிவிட்டோம். நவம்பர் 30, அன்று 2020 ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தை நாம் காண முடியும். இது கார்த்திகை தீப திருநாளுக்கு அடுத்ததாக நிகழ்வது கூடுதல் சிறப்பு. நீங்கள் சந்திர கிரகணத்தை காண விரும்பினால், அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இங்கே.

2020 இறுதி சந்திர கிரகணம்: பார்ப்பது எப்படி?

2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தைக் காண விண்வெளி ஆர்வலர்களும் மற்றும் வான் நிகழ்வு ஆர்வலர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்தியாவில் நாம் அதை காண முடியாது. ஏனென்றால், கிரகணம் நிகழும்போது சந்திரன் அடிவானத்திற்கும் கீழே இருக்கும்.

வானியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 1:02 மணியளவில் தொடங்கும் என்றும், மாலை 3:12 மணியளவில் உச்சத்தை அடையும் என்றும், மாலை 5:23 மணிக்கு முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இருந்தாலும், வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் 2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தின் முழு மகிமையையும் காணலாம். நீங்கள் இந்த வான நிகழ்வைப் பார்க்க விரும்பினால், நீங்கள் அதை லைவ்ஸ்ட்ரீம் செய்யும் தளங்களில் பார்க்கலாம்.

Views: - 23

0

0