தீப்பிடித்து எரியும் இதயம் உட்பட கலர் கலரா புது எமோஜிஸ்! வாட்ஸ்அப்ல இதை நீங்கள் கவனித்தீர்களா?

Author: Hemalatha Ramkumar
9 August 2021, 9:53 am
latest emoji pack making Whatsapp messaging more fun
Quick Share

வாட்ஸ்அப் அதன் பிரபலமான மெசேஜிங் செயலியில் புதிய எமோஜிக்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. தற்போது, ​​வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் பீட்டா கட்டமைப்பில் புதிய எமோஜிகளைச் சேர்த்துள்ளது. வெற்றிகரமான பீட்டா வெளியீட்டிற்குப் பிறகு, பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் நிறுவனம், பொது பயன்பாட்டிற்கு எமோஜிகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WAbetaInfo அறிக்கையின்படி, வாட்ஸ்அப் புதிய எமோஜிகளை ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சேர்த்துள்ளது, இது 2.21.16.10. வாட்ஸ்அப்பின் பீட்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது புதிய எமோஜி பேக்கை பயன்படுத்த முடியும்.

இருப்பினும், சமீபத்திய பீட்டா கட்டமைப்பைப் பயன்படுத்தாத பயனர்களுக்கு புதிய எமோஜிகளை உடனடியாக அனுப்பினால் பெறுபவர்கள் அவற்றைப் பார்க்க முடியாது. வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பைத் தவிர, ஆப்பிள் சமீபத்தில் iOS 14.5 புதுப்பிப்புடனும் வாட்ஸ்அப் சமீபத்திய எமோஜி பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய எமோஜி ஆதரவைத் தவிர, மெசேஜிங் தளத்தை முன்பை விட உற்சாகமாகவும் எளிமையாகவும் மாற்ற நிறைய புதிய அம்சங்களில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ‘View Once’ எனும் ஒரு முறை மெசேஜை பார்த்ததும் தானாக டெலிட் ஆகும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

தனியே, வாட்ஸ்அப் பல சாதன ஆதரவையும் வழங்க செயல்பட்டு வருகிறது, இது பயனர்களை பல சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டை இயக்க அனுமதிக்கும்.

அதுமட்டுமல்லாமல் Encrypted backups அம்சத்தையும் கொண்டுவர வாட்ஸ்அப் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இது cloud இல் இருக்கும்போதும் கூட உங்கள் எல்லா உரையாடல்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் ஒரு புதிய அம்சம் ஆகும். தற்போதுவரை, நம் வாட்ஸ்அப் மெசேஜ்கள் செயலியில் மட்டுமே end-to-end encrypt செய்யப்பட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. Cloud இல் இருக்கும் backups encrypt செய்யப்படாமல் பாதுகாப்பின்றியே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Views: - 495

0

0