ரூ.7,799 விலையில 7 இன்ச் டிஸ்பிளேவோட ஒரு போனா? இதை மிஸ் பண்ணவே கூடாது!

11 May 2021, 9:31 pm
Lava Introduces Z2 Max Smartphone With 7-inch HD Display; Price Set At Rs. 7,799
Quick Share

லாவா நிறுவனம் தனது Z-தொடரில் லாவா Z2 மேக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மிக குறைந்த விலையில் பல சிறப்பான அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி  தெரிஞ்சுக்கலாம் வாங்க.

  • லாவா Z2 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 7 அங்குல டிஸ்ப்ளே HD+ ரெசல்யூஷன் மற்றும் முன் கேமரா சென்சாருக்கு மேலே ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த சாதனம் 20.5:9 திரை விகிதமும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
  • மீடியா டெக் ஹீலியோ செயலியுடன் தொலைபேசி கிடைக்கிறது; இருப்பினும், இதன் சரியான பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.
  • ஸ்டோரேஜை மேலும் விரிவாக்க மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டிற்கான ஆதரவும் உள்ளது. 
  • இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய 6,000 mAh பேட்டரியை யூ.எஸ்.பி டைப்-C கேபிள் உடன் கொண்டுள்ளது, ஆனால் இது வேகமான சார்ஜ் செய்யும் அம்சத்தைக் கொண்டிருக்கவில்லை. 
  • மேலும், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பில் இயங்கும்.
  • இரட்டை-பின்புற கேமரா அமைப்பு 13MP முதன்மை லென்ஸ் மற்றும் 2MP ஆழ சென்சார் உடன் சதுர வடிவ கேமரா தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது. முன் பக்கத்தில், உங்களுக்கு 8MP செல்ஃபி கேமரா கிடைக்கும். 
  • கடைசியாக, தொலைபேசி Wi-Fi, 4G VoLTE, புளூடூத் v5, GPS, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் சுமார் 215 கிராம் எடைக் கொண்டதாக இருக்கும்.
  • லாவா Z2 மேக்ஸ் போனின் ஒரே ஒரு 2 ஜிபி RAM + 32 ஜிபி ROM கொண்ட மாடல் 7,799 ரூபாய் விலையில் கிடைக்கும். 
  • ஸ்மார்ட்போனை லாவா இந்தியா நிறுவனத்தின் வலைத்தளம், பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக ஒரே ஒரு ஸ்ட்ரோக் ப்ளூ கலர் விருப்பத்தில் வாங்கலாம்.

Views: - 243

0

0