லெய்க்கா ‘Q2 மோனோக்ரோம்’ ஃபுல்-பிரேம் மோனோக்ரோம் கேமரா அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா?

11 November 2020, 7:15 pm
Leica ‘Q2 Monochrom’ Full-Frame Monochrome Camera Launched
Quick Share

லெய்க்கா Q2 மோனோக்ரோம் கேமராவை அறிமுகப்படுத்துவதன் மூலம் லெய்க்கா தனது ஒரே வண்ணமுடைய கேமராக்களின் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு வெளியான அசல் Q2 கேமராவின் நிறைய அம்சங்களைப் பகிர்ந்துக் கொள்கிறது.

லெய்க்கா Q2 மோனோக்ரோம்: விவரக்குறிப்புகள்

லெய்க்கா Q2 மோனோக்ரோம் 47.3 MP ஃபுல்-பிரேம் மோனோக்ரோம் CMOS சென்சார் கொண்டுள்ளது, இது அடிப்படை ISO 200 இல் 13 ஸ்டாப்ஸ் வரை ஒளியைப் படம்பிடிக்கும் திறன் கொண்டது. ISO  உணர்திறன் இந்த கேமராவில் 100 முதல் 100,000 வரை இருக்கும்.

லெய்க்கா ஒரு நிலையான சம்மிலக்ஸ் 28 மிமீ f/1.7 பிரைம் லென்ஸைப் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும், நீங்கள் மூன்று டிஜிட்டல் ஜூம் முறைகளைப் பெறுவீர்கள் – 35 மிமீ, 50 மிமீ அல்லது 75 மிமீ. இந்த லென்ஸுடன், கடினமான லைட்டிங் நிலைமைகளிலும் கூட உகந்த பட தரத்தை வழங்க நிறுவனம் உறுதியளிக்கிறது.

Q2 மோனோக்ரோம் 3.68MP தீர்மானம் கொண்ட OLED வ்யூஃபைண்டர் உடன் வருகிறது. எந்தவொரு தெளிவான தாமதமும் இல்லாமல் நீங்கள் அதை கண்ணுக்கு அருகில் கொண்டுவந்தவுடன் வ்யூஃபைண்டர் செயல்படுத்துகிறது. பின்புறத்தில், தொடுதல் கட்டுப்பாடுகளுடன் 3 அங்குல TFT LCD மானிட்டர் திரையும் கிடைக்கும்.

வீடியோ பதிவு திறன்களைப் பொருத்தவரை, கேமரா 4k வீடியோக்களை 24 அல்லது 30 FPS, 1080p வீடியோக்களை, 10, 24, 30, 60 மற்றும் 120 FPS திறனில் பதிவு செய்யும். மேலும், ஆப்டிகல் ஷேக் இழப்பீட்டு முறையையும் சேர்த்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

கேமராவின் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்றவாறு கேமராவின் மெனுவை மாற்றியமைத்ததாக லெய்க்கா கூறுகிறது. எனவே, படம் மற்றும் வீடியோ பதிவுக்கான அனைத்து வண்ண அமைப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. மெனுவில், நீலம், செபியா மற்றும் செலினியம் வண்ண டோன்களுக்கான அமைப்புகளையும் காண முடியும்.

லெய்க்கா Q2 மோனோக்ரோம்: விலை மற்றும் கிடைக்கும் நிலவரம்

லெய்க்கா Q2 மோனோக்ரோம் உலகளவில் $5,995 விலையுடனும் அதாவது இந்திய மதிப்பில் ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.4,11,017 விலையைக் கொண்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டியுடன் ரூ.4,85,000 செலவாகும். ஆர்வமுள்ளவர்கள் லெய்க்காவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர் மூலம் கேமராவை வாங்கலாம், இது நவம்பர் 20 முதல் விநியோகத்தைத் தொடங்குகிறது.

Views: - 30

0

0