லெனோவா டேப் P11 5G மற்றும் P12 புரோ 5G டேப்லெட்டுகள் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
9 September 2021, 12:15 pm
Lenovo Tab P11 5G and P12 Pro 5G tablets launched
Quick Share

லெனோவா நிறுவனம் டேப் P11 5ஜி மற்றும் டேப் P12 புரோ 5ஜி ஆகிய டேப்லெட் சாதனங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனங்கள் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, டேப்லெட்டுகள் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டுகள், 2K டிஸ்பிளே ரெசல்யூஷன், ஸ்டைலஸ் ஆதரவு மற்றும் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது.

லெனோவா டேப் P11 5ஜி மற்றும் P12 புரோ 5ஜி ஆகியவை வழக்கமான செவ்வக திரையுடன் குறுகிய பெசல்கள், JBL-ட்யூன்ட் செய்யப்பட்ட குவாட் ஸ்பீக்கர்கள், ஸ்டைலஸ் மற்றும் கூடுதல் விருப்பமாக பிரிக்கக்கூடிய கீபோர்டு ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டிருக்கும்.

லெனோவா டேப் P11 5ஜி சாதகமானது 11 அங்குல 2K (2000×1660 பிக்சல்கள்) IPS LCD திரையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் லெனோவா டேப் P12 புரோ 5ஜி 12.6 அங்குல 2.5K (2500×1600 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம், டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவு ஆகியவற்றை கொண்டிருக்கும்.

லெனோவா டேப் P11 5ஜி பின்புறத்தில் 13 MP கேமரா மற்றும் முன்புறத்தில் 8 MP ஸ்னாப்பர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லெனோவா டேப்லெட் P12 புரோ 5G யும் இதேபோன்ற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஆனால் பின்புறத்தில் கூடுதலாக 5MP அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டுள்ளது.

லெனோவா டேப் P11 5ஜி மற்றும் டேப் P12 புரோ 5ஜி ஆகியவை முறையே ஸ்னாப்டிராகன் 750G மற்றும் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

லெனோவா டேப் P11 5ஜி டேப்லெட் 7,000mAh பேட்டரியை 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது, லெனோவா டேப் P12 புரோ 5ஜி டேப்லெட் 10,200mAh பேட்டரியை 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் ஆன்ட்ராய்டு 11 OS இல் இயங்குகின்றன.

லெனோவா டேப் P11 5ஜி €499 (சுமார் ரூ.43,500) ஆரம்ப விலையில் ஐரோப்பாவில் வாங்க கிடைக்கும்.

இந்த டேப்லெட் P12 புரோ 5G இன் Wi-Fi- ஒன்லி மாடல் அமெரிக்காவில் $609.99 (சுமார் ரூ.45,000) ஆரம்ப விலையில் கிடைக்கும், அதே நேரத்தில் 5G மாறுபாடு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் $899 (தோராயமாக ரூ. 78,000) விலையில் கிடைக்கும்.

Views: - 241

0

0