ரூ.24,999 விலையில் புதுசா Lenovo Tab P11 இந்தியாவில் அறிமுகமாகியிருக்கு! என்னென்ன வசதியெல்லாம் இருக்குன்னு படிங்க

Author: Dhivagar
26 July 2021, 2:56 pm
Lenovo Tab P11 launched in India
Quick Share

லெனோவா இன்று லெனோவா டேப் P11 என்ற டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சந்தையில் லெனோவா இந்த டேப்லெட்டை அறிமுகம் செய்தது.

டேப் P11 சேதமானது 11 அங்குல IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் ஸ்னாப்டிராகன் 662 SoC உடன் இயங்குகிறது. கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் போன்ற கூடுதல் உபகரணங்களுக்கும் இந்த டேப்லெட் ஆதரவு வழங்குகிறது.

டேப்லெட்டின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

லெனோவா டேப் P11 விலை மற்றும் விற்பனை விவரங்கள்

லெனோவா டேப் P11, 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் இதன் விலை ரூ.24,999 ஆகும். இந்த டேப்லெட் பிளாட்டினம் கிரே நிறத்தில் அமேசானிலிருந்து வாங்க கிடைக்கும்.

லெனோவா டேப் P11 விவரக்குறிப்புகள்

புதிய லெனோவா டேப்லெட் 11 அங்குல 2K IPS டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 2,000 × 1,200 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. கூடுதலாக, இது 400 nits உச்ச பிரகாசத்தையும், TUV சான்றிதழுடன் கண் பராமரிப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது. டேப்லெட் அட்ரினோ 610 GPU உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

டேப் P11 4ஜிபி LPDDR4 RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 256 ஜிபி வரை மேலும் சேமிப்பக விரிவாக்கத்திற்கு, டேப் P11 மைக்ரோ SD கார்டு ஆதரவைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, டேப்லெட்டில் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. முன் பக்கத்தில், டேப்லெட்டில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இதில் 7700 mAh பேட்டரி 20W வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளது. டால்பி அட்மோஸ் ஒலி தொழில்நுட்பத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

இணைப்பு அம்சங்களில் 4ஜி LTE, வைஃபை 802.11 ac (2.4GHz / 5GHz), புளூடூத் 5.1, GPS, GLONASS, யூ.எஸ்.பி 2.0 டைப்-C ஆகியவை அடங்கும். டேப்லெட்டின் 258.4 x 163 x 7.5 மிமீ பரிமாணங்களையும், 490 கிராம் எடையையும் கொண்டது.

இந்நிறுவனம் முன்பு லெனோவா டேப் P11 ப்ரோவை இந்தியாவில் ரூ.44,999 விலையில் அறிமுகப்படுத்தியது. டேப்லெட் 11.5 இன்ச் 2K OLED டிஸ்ப்ளேவுடன் 2560 x 1600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலி உடன் இந்த டேப்லெட் இயங்குகிறது.

Views: - 500

0

0