லெனோவா யோகா 6 2-இன்-1 லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது! விவரங்கள் இதோ!

5 March 2021, 11:08 am
Lenovo Yoga 6 convertible laptop launched in India
Quick Share

லெனோவா தனது புதிய யோகா 6 2 இன் 1 லேப்டாப்யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 360 டிகிரி ஹின்ஜ் உடன் வருகிறது. லேப்டாப் ஸ்டைலஸ் ஆதரவோடு வருகிறது மற்றும் ஒரு தனித்துவமான துணியால்-மூடப்பட்ட டெக்ஸ்டைல் கவர் உடன் வருகிறது. லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

லெனோவா யோகா 6 இந்தியாவில் ரூ.86,990 விலையில் கிடைக்கிறது. இது இப்போது முன்கூட்டிய ஆர்டர் செய்ய இப்போது தயாராக உள்ளது. இது மார்ச் 10 ஆம் தேதி முதல் lenovo.com, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும், பின்னர் ஓரிரு நாட்களில் சில்லறை கடைகளில் இருந்து வாங்க கிடைக்கும்.

லெனோவா யோகா 6 விவரக்குறிப்புகள்

லெனோவா யோகா 6 லேப்டாப் 13.3 அங்குல முழு HD IPS மல்டி-டச் டிஸ்ப்ளே 1,080×1,920 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 300 நைட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 72 சதவிகித NTSC வண்ண வரம்பைக் கொண்டுள்ளது. இது 360 டிகிரி ஹின்ஜ் கொண்டுள்ளது, இதன் உதவியுடன் நீங்கள் அதை வெவ்வேறு முறைகளில் அதாவது கூடாரம் போல, தட்டையாக அல்லது எப்போதும் போலவும் பயன்படுத்தலாம். இந்த லேப்டாப் 1.32 கிலோ எடையையும், விண்டோஸ் 10 ஹோம் OS உடனும் இயங்குகிறது.

ஹூட்டின் கீழ், இந்த லேப்டாப் AMD ரைசன் 7 4700U செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 16 ஜிபி வரை DDR4 ரேம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட AMD ரேடியான் கிராபிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சேமிப்பிற்காக, 2-இன் -1 லேப்டாப் 1TB வரை PCIe M.2 SSD உடன் வருகிறது.

லெனோவா யோகா 6 ஆனது 60WHr பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது, இது 18 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், பிரைவசி ஷட்டருடன் 720p வெப்கேமையும் கொண்டுள்ளது. கூடுதல் அம்சங்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு, பாதுகாப்பான உள்நுழைவுக்கான கீபோர்டின் பக்கத்தில் ஒரு கைரேகை சென்சார், சரிசெய்யக்கூடிய இரண்டு-நிலை பேக்லிட் கீபார்டி, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

இணைப்பு விருப்பங்களில் வைஃபை 6, புளூடூத் 5, இரண்டு யூ.எஸ்.பி டைப்-A போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி டைப்-C போர்ட்கள் மற்றும் ஒரு ஹெட்போன் / மைக் காம்போ ஆகியவை அடங்கும். லேப்டாப் 308 x 206x x 17.1 மிமீ அளவுகளைக் கொண்டுள்ளது.

Views: - 41

0

0