ஸ்மார்ட்போன் வணிகத்தை முழுமையாக நிறுத்துவதாக எல்ஜி அறிவிப்பு!
5 April 2021, 11:20 amபல புதுமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவந்த எல்ஜி ஏப்ரல் 5, 2021 அன்று தனது மொபைல் வணிக பிரிவை முழுவதுமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
மொபைல் போன் வணிகத்தில் இருந்து வெளியேறுவதன் மூலம், மின்சார வாகன உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு, இணைக்கப்பட்ட சாதனங்கள், ஸ்மார்ட் வீடுகள் போன்ற துறைகளில் அதிகம் கவனம் செலுத்தப்போவதாக எல்ஜி தெரிவித்துள்ளது.
எல்ஜி நிறுவனம் தற்போது இருக்கும் சரக்குகளை தீர்க்க தொலைபேசிகளை தொடர்ந்து விற்பனை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆதரவு மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகளையும் வழங்கும்.
எல்ஜி வழங்கிய தகவலின் படி, மொபைல் போன் வணிக நிறுத்தம் ஜூலை 31 க்குள் நிறைவடையும். தற்போதுள்ள சில மாடல்களின் சரக்குகள் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகும் கிடைக்கக்கூடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஜியின் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு முன்பே வெளியாகியிருந்தது, ஏனெனில் அதன் ஸ்மார்ட்போன் வணிகம் 2015 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முதலே இழப்பை சந்திக்கிறது. இது கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் 5 டிரில்லியன் டாலர் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஒரு கவுண்டர் பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, எல்ஜியின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 6.5 மில்லியன் யூனிட்டுகள் மட்டுமே ஆகும். அதாவது உலகளாவிய 2020 ஆம் ஆண்டின் சந்தை பங்கில் மூன்றாம் காலாண்டில் 2% மட்டுமே பங்காளித்துள்ளது.
LG velvet, LG ThinQ போன்ற பல புதுமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த LG இப்போது தனது மொபைல் வணிகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது LG ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
0
0