ரூ.350 கோடி லாபம் பார்த்த எல்ஜி G8X தின்கியூ போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது!

20 October 2020, 6:37 pm
LG G8X ThinQ Next Flipkart Sale Announced; Features, Price Offers
Quick Share

எல்ஜி G8X தின்க் யூ பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையில் 12 மணி நேரத்திற்குள் ரூ.350 கோடி வருவாயை ஈட்டியதாக நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். 

மேலும், இந்த போன்களின் ஸ்டாக்குகளும் விற்று தீர்ந்தது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி இரட்டை திரை கைபேசியை கடந்த ஆண்டு ரூ.49,999 விலையில் விற்பனை செய்தது. ஆனால், இந்த பண்டிகைக்கால விற்பனையின் போது, ​​கைபேசி மிகப் பெரிய விலைக் குறைப்பைப் பெற்றது, விற்பனையின் தொடக்கத்தில், இதன் விலை ரூ.19,990 ஆக இருந்தது.

ஆனால், இப்போது கைபேசி இ-காமர்ஸ் தளத்தில் ரூ.21,990 விலையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. எல்ஜி முதல் 12 மணி நேரத்தில் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட எல்ஜி G8X தின் கியூ போன்களை விற்றுள்ளது. இருப்பினும், கைபேசி தற்போது கையிருப்பில் இல்லை.

பிளிப்கார்ட்டில் எல்ஜி G8X தின் கியூ அடுத்த விற்பனை

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அக்டோபர் 20 (இன்று) இரவு 8 மணிக்கு தொடங்கி பிளிப்கார்ட்டில் மீண்டும் கைபேசியை வாங்க முடியும். இது கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இந்நிறுவனம் ரூ.16,400 வரை பரிமாற்றம் சலுகையையும் வழங்குகிறது. தவிர, வட்டி இல்லாத EMI விருப்பம் உட்பட பல சலுகைகளும் உள்ளன.

Views: - 68

0

0