எல்ஜி நிறுவனத்தின் குறைந்த விலையிலான W சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | விலை, அம்சங்கள் & விவரங்கள்

7 November 2020, 8:19 am
LG launches W11, W31 and W31+ smartphones in India, prices start at ₹9,490
Quick Share

எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போன்களான எல்ஜி W 11, எல்ஜி W 31 மற்றும் எல்ஜி W 31 + ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை கேமரா செயல்திறன், டிஸ்பிளே மற்றும் பேட்டரி ஆயுள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவை. 

எல்ஜி W 31 மற்றும் W 31 + ஆகியவை சற்று கூடுதல் விலைக்கொண்ட கைபேசிகள் என்றாலும், எல்ஜி W11 பட்ஜெட் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. W11 ரூ.9,490 விலையில் கிடைக்கிறது, W31 மற்றும் W31 + முறையே, ரூ.10,990 மற்றும் ரூ.11,990 விலைக்கு வாங்கலாம்.

எல்ஜி W31 மற்றும் W31+ ஆகியவை 6.52 இன்ச் HD+ ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவை 20:9 திரை விகிதத்துடன் கொண்டுள்ளது, மேலும் அவை ஆக்டா கோர் 2 GHz செயலி உடன் இயக்கப்படுகின்றன. W31 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் 512 ஜிபி வரை விரிவாக்க முடியும், W31+ போனிலும் 4GB ரேம் இருக்கும், ஆனால் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி விரிவாக்கப்பட்ட ஸ்டோரேஜ் சப்போர்ட் கொண்டிருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரையில், நீங்கள் 13 மெகாபிக்சல் முதன்மை பின்புற சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் சென்சார் ஆகியவற்றைப் பெறுவீர்கள். முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இரண்டுமே 4000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன, மேலும் இது 5 ஜி க்கான ஆதரவைக் கொண்டிருக்காது.

எல்ஜி W 11, W 31 மாடல்கள், குறிப்பிடப்படாத 2 GHz ஆக்டா கோர் செயலி, 3 ஜிபி ரேம், 5 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவுடன் 32 ஜிபி சேமிப்பு மற்றும் இரண்டு பின்புற கேமராக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் கேமராக்கள் இருக்கும். செல்ஃபிக்களுக்கு, 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 4000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 10 OS உடன் இயக்கப்படுகிறது.

Views: - 44

0

0