இரட்டை பின்புற கேமராக்கள், மீடியா டெக் ஹீலியோ P22 SoC உடன் எல்ஜி Q31 ஸ்மார்ட்போன் அறிமுகம் | முழு விவரம் அறிக
18 September 2020, 4:19 pmஎல்ஜி கொரியாவில் Q31 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி கடந்த மாதம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட K31 போன்ற வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது.
எல்ஜி Q31 ஒற்றை 3 ஜிபி + 32 ஜிபி சேமிப்பக மாடலுக்கு KRW 2,09,000 (தோராயமாக ரூ.13,150) விலையைக் கொண்டுள்ளது மற்றும் ஒற்றை மெட்டாலிக் சில்வர் கலர் விருப்பத்தில் வருகிறது. இந்த தொலைபேசி செப்டம்பர் 25 முதல் தென் கொரியாவில் விற்பனைக்கு வரும்.
எல்ஜி Q31 இல் 5.7 இன்ச் HD+ நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே 720 x 1520 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 18.9:9 விகிதத்தைக் கொண்டது. ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 செயலி உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை சேமிப்பை மேலும் விரிவாக்க முடியும்.
எல்ஜி Q31 கேமராக்களுக்குக் கீழே பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இடதுபுறத்தில் பிரத்யேக கூகிள் அசிஸ்டன்ட் பட்டனும் உள்ளது. தொலைபேசி எட்டு MIL-STD 810G சோதனைகளுக்கும் இணங்குகிறது.
கேமரா பிரிவில், ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் அகல-கோண இரண்டாம் நிலை லென்ஸுடன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, U-வடிவ உச்சிப் பகுதியினுள் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Q31 3000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது, இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இணைப்பு முன்னணியில், இது 4ஜி LTE, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது. தொலைபேசி 147.82×71.12×8.63 மிமீ அளவுகளையும் மற்றும் 146 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.