போனில் பேச இனிமேல் SIM எல்லாம் தேவையே இல்லை ! எப்படி தெரியுமா?

9 September 2020, 1:38 pm
LG Uplus develops SIM-less cellular tech with global partners
Quick Share

தென் கொரியாவின் மூன்றாவது பெரிய மொபைல் சேவை வழங்குனரான எல்ஜி யூபிளஸ் (LG Uplus), உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து மேம்பட்ட செல்லுலார் மாடியூள் தொழில்நுட்பத்தை (advanced cellular module technology) உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் மொபைல் சாதனங்களில் Subscriber Identification Module எனும் SIM கார்டு (சிம்) என்பதே தேவையில்லை.

செல்லுலார் சிப்செட் டெவலப்பர் ஆன சோனி செமிகண்டக்டர் இஸ்ரேல், உள்ளூர் தகவல் தொடர்பு தொகுதி தயாரிப்பாளர் ஆன NTmore மற்றும் ஜெர்மன் டிஜிட்டல் பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான கீசெக்+ (Giesecke+Devrient) டெவ்ரியண்ட் ஆகியோருடன் இணைந்து எல்ஜி யூபிளஸ் இன்டெக்ரேட்டட் யுனிவர்சல் இன்டெக்ரேட்டட் சர்க்யூட் கார்டு (iUICC) தீர்வுகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சிம் கார்டுகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேமித்து, மொபைல் நெட்வொர்க் வழங்குநர்கள் தங்கள் திட்டங்களையும் சேவைகளையும் எளிதில் அடையாளம் காண உதவுகிறது.

iUICC என்பது ஒரு தொழில்நுட்பமாகும், இதில் சிம் செயல்பாடு ஒரு தகவல் தொடர்பு சிப்செட் மூலம் செயல்படுத்தப்படுகிறது மற்றும் இது குரல் மற்றும் தரவு இணைப்பும் வழங்கப்படுகிறது.

சிம் கார்டுக்கு என தனி இடம் அல்லது கூடுதல் உபகரணங்கள் தேவையில்லை என்பதால் சாதன உற்பத்தியாளர்களுக்கு இந்த சமீபத்திய தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், உற்பத்தி செலவுகளை குறைக்கவும், சாதனங்களை குறைந்த விலையில் பயனர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கவும் இது   மிக உதவியாக இருக்கும் என்று எல்ஜி யூபிளஸ் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) தயாரிப்புகளில் iUICC தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக எல்ஜி யூபிளஸ் தெரிவித்துள்ளது, குறிப்பாக கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் வெளிப்புற ஆய்வு உபகரணங்களில் இது முதலில் பயன்படுத்தப்படக்கூடும்.

இந்த iUICC தொழில்நுட்பத்தின் மூலம் SIM கார்டு  இல்லாத தகவல் தொடர்பு சாதனங்கள் விரைவில் உலக நாடுகளில் அறிமுகம்  ஆகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்தியாவில் eSIM வருகை துவங்கியுள்ள நிலையில்  இது போன்ற கண்டுபிடிப்பும் உலக சந்தைகளுக்கு வரும்போது தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவரை இது பற்றிய கூடுதல் Update களுக்கு updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 17

0

0