எல்ஜியின் தனித்துவமான T-வடிவ ஸ்மார்ட்போனைப் பார்த்ததுண்டா? இணையத்தில் வெளியான வீடியோ இங்கே

28 August 2020, 1:15 pm
LG's unique T-shaped dual-screen phone spotted in leaked video
Quick Share

எல்ஜி நிறுவனம் சில காலமாக டூயல் ஸ்கிரீன் அதாவது இரட்டைத்திரை ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாக வதந்திகள் பரவியுள்ளது. இருப்பினும் இப்போது வெளியாகியுள்ள வீடியோவைப் பார்த்தால் நீங்கள் எதிர்பார்ப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மற்றும் புது விதமான மடிக்கக்கூடிய தொலைபேசியை எல்ஜி  தயார் செய்திருப்பதாக தெரிகிறது. ‘எல்ஜி விங்’ என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் T வடிவ வடிவமைப்பு உள்ளது. எல்ஜி விங்கின் புதிய வீடியோ இப்போது இணையத்தில் கசிந்துள்ளது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி பகிர்ந்த எல்ஜி விங் போனின் 11 விநாடிகள் மட்டுமே கொண்ட ஒரு குறுகிய வீடியோவில், தொலைபேசி ஒரு காரில் வழிசெலுத்தலுக்குப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது. வழிசெலுத்தல் வரைபடத்தைக் காட்டும் பிரதான திரை மற்றும் ஆப்பிள் மியூசிக் இயக்கும் இரண்டாம் திரை ஆகியவற்றைக் கொண்டு தொலைபேசி இயங்குவதை காட்டுகிறது. இரண்டாவது திரை வீடியோவில் இன்கமிங் அழைப்பு வருவதையும் காட்டுகிறது. 

இரண்டாம் நிலைத் திரை செருகப்பட்டு வெளியே இழுக்கப்படும் வகையில் உள்ளதாக தோன்றுகிறது. ஆனால் பழைய T-மொபைல் தொலைபேசிகளைப் போல இரண்டாம் நிலைத் திரையை நகர்த்தவோ அல்லது சுழற்றவோ முடியாது என்று தெரிகிறது. இது எல்ஜி விங்கின் அதிகாரப்பூர்வ பதிப்பு அல்ல, ஆனால் வீடியோவின் அடிப்படையில் வைத்துப் பார்க்கையில், போன் கிட்டத்தட்ட இதுபோன்று தான் இருக்கப்போகிறது என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.

எல்ஜி விங்கில் உள்ள இரட்டை-திரை வடிவமைப்பு வீடியோக்களைப் பார்ப்பது, இணையத்தில் உலாவுதல் மற்றும் புகைப்பட எடிட்டிங் போன்ற செயல்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, அங்கு ஒரு படம் முதன்மைத் திரையில் இருக்கும் மற்றும் எடிட்டிங் கருவிகள் சிறிய திரையில் இருக்கக்கூடும்.

எல்ஜி விங் 6.8 அங்குல மெயின் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்றும், சிறிய டிஸ்பிளே 4 அங்குல திரையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது 5G க்கான ஆதரவுடன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 700-தொடர் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். எல்ஜி விங் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் வதந்திகள் பரவியுள்ளது. எது எப்படியோ, இந்த T-வடிவ மொபைல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து புதுப்பிப்புகளுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 48

0

0