2021 ஜூலை மாதம் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் உங்களுக்காக இதோ

Author: Dhivagar
30 July 2021, 12:06 pm
List Of Best Smartphones Launched In July Month 2021
Quick Share

ஜூலை 2021 இல் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின. இந்த பட்டியலில் இந்த ஆண்டில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலும் அடங்கும். ஓப்போ ரெனோ 6 ப்ரோ, ஒன்பிளஸ் நோர்ட் 2, மற்றும் போகோ F3 GT ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 SoC சிப்செட் உடன் அறிமுகம் ஆகின.

அது மட்டுமில்லாமல், டெக்னோ கேமன் 17 ப்ரோ, சாம்சங் கேலக்சி A22, சியோமி ரெட்மி நோட் 10T, சாம்சங் கேலக்சி M21 2021 போன்ற பல ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் ஆகின. 

இப்போது இந்த சிறந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைக்யும் விலை விவரங்களையும் பார்க்கலாம்:

ஒன்பிளஸ் நோர்ட் 2

OnePlus Nord 2 5G With Dimensity 1200 AI SoC Goes On Sale In India; Where To Buy?
 • ஒன்பிளஸ் தனது சமீபத்திய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமராக்கள், மீடியா டெக் டைமன்சிட்டி 1200-AI செயலி, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
 • ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது குறிப்பிடத்தக்க வகையிலான பெசல் டிசைன் மற்றும் டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
 • கைபேசி 6.43 இன்ச் ஃபுல்-HD+ (1080×2400 பிக்சல்கள்) லிக்குயிட் AMOLED திரையை 90 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR 10 + ஆதரவுடன் கொண்டுள்ளது.
 • இது ப்ளூ ஹேஸ், கிரே சியரா மற்றும் கிரீன் வூட்ஸ் (இந்தியாவிற்கு பிரத்தியேகமாக) ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படும்.
 • ஒன்பிளஸ் நார்டு 2 5 ஜி ஒரு மூன்று பின்புற கேமரா யூனிட்டில், 50 MP (f/1.8) சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை ஸ்னாப்பர், OIS ஆதரவுடன், 8 MP (f/2.3) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 MP (f/2.4) மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது 32MP (f / 2.5) சோனி IMX615 முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.
 • ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மீடியா டெக் டைமன்சிட்டி 1200-AI சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 • இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான ஆக்ஸிஜன்OS 11.3 இல் இயங்குகிறது மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 • இணைப்பிற்காக, சாதனம் வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, NFC, 5ஜி மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
 • ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி 6 ஜிபி / 128 ஜிபி மாடலுக்கு ரூ. 27,999 விலையும், 8 ஜிபி / 128 ஜிபி மாடலுக்கு ரூ. 29,999, 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ.34,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போகோ F3 GT

Poco F3 GT launched in India with different pricing structure

போகோ தனது சமீபத்திய கேமிங் சென்ட்ரிக் ஸ்மார்ட்போனான F3 GTயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 • இதன் விலை ரூ.26,999 முதல் ஆரம்பமாகிறது மற்றும் ஜூலை 26 முதல் விற்பனைக்கு வரும்.
 • சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, கைபேசி 120 Hz AMOLED டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் டைமன்சிட்டி 1200 சிப்செட், மூன்று மைக்ரோஃபோன்கள் மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
 • POCO F3 GT ஒரு பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு, ஒரு விண்வெளி-தர அலுமினிய அலாய் பிரேம், பின்புறத்தில் கிளாஸ் பேனல் மற்றும் ஒரு பக்கமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் கேமிங்கிற்கென Maglev Triggers ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 • இந்த சாதனம் 120 Hz புதுப்பிப்பு வீதம், DC டிம்மிங் தொழில்நுட்பம் மற்றும் 480 Hz தொடுதல் மாதிரி விகிதத்துடன் 6.67 அங்குல முழு எச்டி + (1080×2400 பிக்சல்கள்) AMOLED திரையைக் கொண்டுள்ளது.
 • இது பிரிடேட்டர் பிளாக் மற்றும் கன்மெட்டல் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
 • மேக்லெவ் ட்ரிக்கர்ஸ் (காந்த லெவிட்டேஷன் தூண்டுதல்கள்) மினியேச்சரைஸ் செய்யப்பட்ட மெக்கானிக்கல் கேமிங் பொத்தான்கள் ஆகும், அவை செயலற்ற நிலையில் இருக்கும் போது பிரேம் உடன் பொருந்தி இருக்கும். நேரடியாக அவற்றைச் செயல்படுத்தும்போது தானாகவே பாப்-அப் ஆகும்.
 • துல்லியமான கட்டுப்பாடுகளுக்காக இந்த இரண்டு தூண்டுதல்களையும் ஒரு விளையாட்டின் மெய்நிகர் பட்டன்களாக மேப் செய்யலாம். மேக்லெவ் தூண்டுதல்கள் எந்தவொரு சிறப்பு ஒருங்கிணைப்பும் இல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் வேலை செய்கின்றன.
 • POCO F3 GT போனில் 64MP (f / 1.7) முதன்மை சென்சார், 8MP (f / 2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP (f / 2.4) மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் RGB ஒளிரும் விளக்கு ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது 16MP முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.
 • POCO F3 GT மீடியாடெக் டைமன்சிட்டி 1200 சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெறுகிறது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 • உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான MIUI 12.5 இல் இயங்குகிறது மற்றும் 67W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,065mAh பேட்டரியை பேக் செய்கிறது.
 • இணைப்பிற்காக, சாதனம் வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, NFC மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.
 • போகோ F3 GT விலை:
 • 6 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் – ₹26,999 
 • 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் – ₹28,999
 • 8 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் – ₹30,999
 • அறிமுகம் சலுகையாக ஆகஸ்ட் 2 வரை அனைத்து மாடல்களிலும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி

Samsung's cheapest 5G smartphone in India launched
 • சாம்சங் தனது சமீபத்திய A-சீரிஸ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
 • ரூ.19,999 விலையில் இந்த கைபேசி இந்தியாவில் மலிவான சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, சாதனம் முழு HD+ டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் டைமன்சிட்டி 700 செயலி மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 • சாம்சங் கேலக்ஸி A22 5ஜி பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது சதுர வடிவ டிரிபிள் கேமரா யூனிட்டைக் கொண்டது.
 • இந்த கைபேசி 6.6 அங்குல TFT திரையை முழு-HD+ (1080×2400 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 20:9 திரை விகிதம் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 • இது புதினா, சாம்பல் மற்றும் வயலட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
 • சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஒரு மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 MP (f/1.8) முதன்மை ஸ்னாப்பர், 5 MP (f/2.2) அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2 MP (f/2.4) ஆழம் கொண்ட லென்ஸ் உள்ளன. செல்ஃபிக்களுக்கு, இது 8MP (f / 2.0) முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.
 • சாம்சங் கேலக்ஸி A22 5 ஜி மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெறுகிறது, இது 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
 • இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான One UI கோர் 3.1 இல் இயங்குகிறது மற்றும் 15 W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 • இணைப்பிற்காக, சாதனம் டூயல்-பேன்ட் W-Fi, புளூடூத் 5.0, GPS, 5ஜி, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.
 • இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 6 ஜிபி / 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999 ஆகவும் மற்றும் 8 ஜிபி / 128 ஜிபி மாடலின் விலை ரூ.21,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • இந்த தொலைபேசி இன்று நள்ளிரவு முதல் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.
 • விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கும்.

ரெட்மி நோட் 10T 5 ஜி

Redmi Note 10T 5G with 90Hz display, Dimensity 700 launched in India
 • சியோமி நிறுவனம், இந்தியாவில் நிறுவனத்தின் முதல் இடைப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 10T 5ஜி போனை  அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் 6.5 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் டைனமிக் ஸ்விட்ச் டாட் டிஸ்ப்ளே உள்ளடக்கத்தை தானாக சரிசெய்யும் திறன் கொண்டது (30 ஹெர்ட்ஸ் / 50 ஹெர்ட்ஸ் / 60 ஹெர்ட்ஸ் / 90 ஹெர்ட்ஸ்), 91% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், பஞ்ச்-ஹோலுக்குள் 8 MP முன் கேமராவையும் கொண்டுள்ளது. இது 4 ஜிபி RAM கொண்ட டைமன்சிட்டி 700 SoC உடன் இயக்கப்படுகிறது.
 • இந்த தொலைபேசியில் 48 MP பின்புற கேமரா மற்றும் 2 MP டெப்த் கேமரா மற்றும் 2 MP மேக்ரோ கேமராக்கள் உள்ளன, ரெட்மி நோட் 10 தொலைபேசிகளைப் போலவே Evol டிசைனில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது மற்றும் 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆத்ரவுடன் 5,000 mAh பேட்டரி உள்ளது.
 • 6.5-இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு HD+ 20:9 LCD திரை, 90 Hz புதுப்பிப்பு வீதம், 500 நிட்ஸ் உச்ச பிரகாசம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
 • மாலி-G57 MC2 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 7nm செயலி  (Dual 2.2GHz Cortex-A76 + Hexa 2GHz Cortex-A55 CPUs) உள்ளது.
 • 64 ஜிபி (UFS 2.2) ஸ்டோரேஜ் உடன் 4 ஜிபி LPDDR 4X RAM / 128 ஜிபி (UFS 2.2) ஸ்டோரேஜ் உடன் 6 ஜிபி LPDDR 4X RAM, மைக்ரோ SD உடன் 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உள்ளது.
 • MIUI 12.5 உடன் ஆன்ட்ராய்டு 11
 • ஹைபிரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ SD)
 • பின்புறத்தில், 48 MP கேமரா, LED ஃப்ளாஷ், 2 MP டெப்த் மற்றும் 2 MP மேக்ரோ கேமரா
 • முன்பக்கத்தில் 8 MP செல்ஃபி கேமரா உள்ளது.
 • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், IR சென்சார்
 • 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ
 • பரிமாணங்கள்: 161.81 x 75.34 x 8.92 மிமீ; எடை: 190 கிராம்
 • ஸ்பிளாஸ் புரூஃப் (P2i கோட்டிங்)
 • டூயல் 5G (5G NSA: n1 / n3 / n40 / n77 / n78, 5G SA: n78 பேன்ட்ஸ்), இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS, USB Type-C
 • 18W வேகமான சார்ஜிங் கொண்ட 5000 mAh (வழக்கமான) பேட்டரி
 • ரெட்மி நோட் 10T 5 ஜி மெட்டாலிக் ப்ளூ, மிண்ட் கிரீன், குரோமியம் ஒயிட் மற்றும் கிராஃபைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும், இதன் விலை 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4 ஜிபி RAM கொண்ட மாடலுக்கு ரூ.13999 ஆகிவும்  மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6 ஜிபி RAM கொண்ட மாடலின் விலை ரூ.15999 ஆகவும் நிர்ணயம் செய்யப்படடுள்ளது. இது அமேசான் இந்தியா, mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து ஜூலை 26 முதல் வாங்க கிடைக்கும்.
 • எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI உடன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Views: - 254

0

0