மஹிந்திரா தார் விலைகள் ரூ.40,000 வரை எகிறியது | புதிய விலை பட்டியல் இங்கே

14 January 2021, 11:00 am
Mahindra Thar Prices Hiked
Quick Share

மஹிந்திரா தனது புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் விலை பட்டியலை இந்திய சந்தையில் புதுப்பித்துள்ளது. புதிய மஹிந்திரா தார் விலைகள் இப்போது அனைத்து வகைகளிலும் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது: AX மற்றும் LX. இரண்டு டிரிம்களும் வெவ்வேறு பவர்டிரெய்ன் மற்றும் விருப்பங்களுடன் (ஹார்ட் டாப் மற்றும் கன்வெர்ட்டிபிள்) வழங்கப்படுகின்றன. மஹிந்திரா தார் மாடலின் புதிய தொடக்க விலை ரூ.12.10 லட்சமாக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது; முந்தைய விலையான ரூ.11.90 லட்சத்திலிருந்து ரூ.20,000 அதிகரித்துள்ளது.

மஹிந்திர தாரின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டின் விலை இப்போது முந்தைய விலையான ரூ.13.75 லட்சத்துடன் ஒப்பிடும்போது ரூ.14.15 லட்சம் ஆக  உயர்ந்துள்ளது; இது ரூ.40,000 வரை விலை உயர்வுப் பெற்றுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் (டெல்லி). மஹிந்திர தாரின் புதிய மாறுபாடு வாரியான விலைகள் இங்கே:

வேரியனட்புதிய விலைபழைய விலை
AX (O) பெட்ரோல் MT CTRs12,10,337Rs11,90,000
AX (O) டீசல் MT CTRs12,30,337Rs12,10,000
AX (O) டீசல் MT HTRs12,40,337Rs12,20,000
LX பெட்ரோல் MT HTRs12,79,337Rs12,49,000
LX டீசல் MT CTRs13,15,336Rs12,85,000
LX டீசல் MT HTRs13,25,337Rs12,95,000
LX பெட்ரோல் AT CTRs13,85,337Rs13,45,000
LX பெட்ரோல் AT HTRs13,95,336Rs13,55,000
LX டீசல் AT CTRs14,05,336Rs13,65,000
LX டீசல் AT HTRs14,15,338Rs13,75,000

குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி).


CT: Convertible & HT: Hard top

விலை உயர்வு தவிர, மஹிந்திர தாரில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. எஸ்யூவி கடந்த ஆண்டு பிற்பகுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. புதிய மஹிந்திரா தார் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் வருகிறது, இதில் பெரிய பரிமாணங்கள், புதிய அம்சங்கள், நவீன ஸ்டைலிங் மற்றும் வலுவான இன்ஜின் விருப்பங்கள் உள்ளன; இது மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாக அமைகிறது.

Views: - 11

0

0