மஹிந்திரா தார் மாடலின் விலை எக்கச்சக்க உயர்வு! செம ஷாக் கொடுத்த மஹிந்திரா நிறுவனம்

13 July 2021, 12:37 pm
Mahindra Thar Prices Increased
Quick Share

மஹிந்திரா தனது அனைத்து மாடல் விலையையும் மீண்டும் உயர்த்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டுமே மூன்று முறை விலைகளை உயர்த்தியுள்ளது, மேலும் இந்த சமீபத்திய விலை திருத்தம் ஜூலை 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது.

மஹிந்திராவிலிருந்து சமீபத்திய விலை உயர்வு என்பது உற்பத்தியில் அதிகரித்த உள்ளீட்டு செலவுகளை ஈடுசெய்யும் முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மட்டுமல்லாமல் பல நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய விலை உயர்வில், குறைவாக விற்பனையாகும் மாடல்களான அல்டுராஸ் G4 மற்றும் KUV 100 ஆகியவை ஒவ்வொன்றும் முறையே ரூ.3,356 மற்றும் ரூ.3,068 விலை உயர்ந்துள்ளன.

விரைவில் மாற்றப்படவுள்ள XUV 500 மாடலுக்கும் கிட்டத்தட்ட ரூ.2,670 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பொலெரோ, மராஸ்ஸோ, ஸ்கார்பியோ மற்றும் XUV 300 போன்ற மாடல்களின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளன.

பொலெரோவின் விலைகள் ஏறக்குறைய ரூ.22,500 வரை உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் மராசோ ரூ.26,597 முதல் ரூ.30,867 வரை விலை உயர்ந்துள்ளது. ஸ்கார்பியோவின் விலையும் கிட்டத்தட்ட 2 சதவீதம் அதாவது ரூ.27,211 முதல் ரூ.37,395 வரை உயர்ந்துள்ளது.

XUV300 மாடலின் விலை உயர்வு மிகவும் அதிகமாக இருக்கிறது, சில வகைகளில் குறைந்தபட்சம் ரூ.3,606 முதல் வேறு சில வகைகளில் ரூ.24,029 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மஹிந்திராவின் டாப் மாடலான தார் சுமார் ரூ.32,000 முதல் ரூ.92,000 வரை விலை உயர்வு பெற்றுள்ளது.

Views: - 559

0

0