சர்வதேச வலைத்தளங்கள் செயலிழக்க காரணம் இதுதான் | மீண்டும் செயல்பாடுகள் துவக்கம்

8 June 2021, 4:56 pm
Massive internet outage hits websites including Amazon, gov.uk and Guardian
Quick Share

கார்டியன், இங்கிலாந்து அரசாங்கத்தின் வலைத்தளமான gov.uk, அமேசான் மற்றும் ரெடிட் உள்ளிட்ட பல சர்வதேச வலைத்தளங்களை மிகப்பெரிய இணைய செயலிழப்பால் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல பயனர்கள் தளங்களை அணுக முடியாமல் போனது.

Massive internet outage hits websites including Amazon, gov.uk and Guardian

ஃபாஸ்ட்லி (Fastly) எனும் நிறுவனம் இயக்கும் உள்ளடக்க விநியோக நெட்வொர்க்கில் (CDN) செயலிழப்பு ஏற்பட்டதால் இந்த இந்த உலகளாவிய செயலிழப்பு ஏற்பட்டதாக  கண்டறியப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணியளவில் தொடங்கியது, மேலும் ஏராளமான தளங்கள் இதனால் அணுக முடியாமல் போனது.

சில வலைத்தளங்கள் முழுமையாக முடங்கியதோடு, பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டருக்கான ஈமோஜிகளை வழங்கும் சேவையகங்களும் பிற சேவைகளின் குறிப்பிட்ட பிரிவுகளும் பின்னடைவைச் சந்தித்தன.

இந்த Fastly எனும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் நிறுவனம் தான் “Edge Cloud” சேவையை வழங்குகிறது, இது வலைத்தளங்களுக்கான loading time ஐ குறைப்பதற்கும், சேவை மறுப்பு பிரச்சினைகளிலிருந்து தளங்களை பாதுகாப்பதற்கும், இணைய போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக உலகளாவிய CDN செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் சர்வதேச வலைத்தளங்கள் அனைத்தும் செயல்பட துவங்கின.

Views: - 220

0

0

Leave a Reply