224 மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டது இதற்குத்தான் | MeitY விளக்கம்

17 September 2020, 9:07 am
MeitY has blocked 224 mobile apps in interest of national security
Quick Share

தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலனுக்காக 224 மொபைல் பயன்பாடுகளை IT அமைச்சகம் தடை செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஆகியவற்றின் நலனுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் 69A பிரிவின் கீழ் டிக்டாக், ஹலோ மற்றும் வீசாட் உள்ளிட்ட 224 மொபைல் பயன்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeiTy) தடைச் செய்துள்ளது.” என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

“இந்த செயலிகள் மற்ற நாடுகளுடன் இந்திய பயனர்களின் தகவலைப் பகிரக்கூடும் என்பதால் தேசிய பாதுகாப்பு நோக்கத்திற்காக தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் எந்தவொரு நாட்டினருடனும் இந்திய மக்களின் தகவல்கள் பொது களத்தில் வெளியிடப்படாது” என்றும்  கூறியுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, செயலிகளின் பொது அணுகலைத் தடைச் செய்வது தேவைகளுக்கேற்ப நிகழும் ஒரு செயல் என்று தோத்ரே கூறினார்.

ஜூன் மாதத்தில், டிக்டாக், UC உலாவி, ஷேரீட், வீசாட், கேம்ஸ்கேனர் மற்றும் Mi கம்யூனிட்டி உள்ளிட்ட 59 சீன செயலிகளை அரசாங்கம் தடை செய்தது.

இந்த மாத தொடக்கத்தில், பிரபலமான கேமிங் பயன்பாடான PUBG உட்பட மேலும் 118 மொபைல் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.