MG Gloster 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் | விலை எவ்வளவு? என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கு? தெரிஞ்சிக்கலாம் வாங்க | MG Gloster Savvy 7-Seater
Author: Hemalatha Ramkumar9 August 2021, 3:29 pm
பிரிட்டிஷ் வாகன தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் தனது க்ளோஸ்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை 6-சீட்டர் உள்ளமைவுடன் மட்டுமே கிடைத்துவந்த முதன்மை மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய 7 சீடர் மாடலில் நடுத்தர வரிசையில் ஒரு பெஞ்ச் இருக்கை உள்ளது மற்றும் BS6-இணக்கமான 2.0 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் இன்ஜின் மூலம் ஆற்றல் பெறுகிறது.
எம்ஜி க்ளோஸ்டர் 7-சீட்டர் மாடலில் திடமான பொன்னட், பெரிய க்ரோம்-ஃபினிஷ் கிரில், DRL வசதியுடன் நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவை உள்ளது.
பக்கங்களில், இது ரூஃப் ரெயில்ஸ், ORVMs, கருமையான B-தூண்கள், பக்க ஸ்டெப்பர்கள் மற்றும் 19 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை உள்ளன.
நான்கு சக்கர வாகனத்தின் பின்புற முனையில் எல்இடி டெயில்லைட்கள், ஒரு ஜன்னல் வைப்பர், குவாட் எக்ஸாஸ்ட் டிப்ஸ் மற்றும் அச்சிடப்பட்ட ‘க்ளோஸ்டர்’ எழுத்துக்கள் ஆகியவை இடம்பெறும்.
எம்ஜி க்ளோஸ்டர் 7-சீட்டர் மாடல் BS6-இணக்கமான 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின் உடன் இயங்குகிறது, இது அதிகபட்சமாக 215 bhp பவரையும், 480 Nm உச்ச திருப்பு விசையையும் உருவாக்கும் திறன் கொண்டது. டிரான்ஸ்மிஷன் கடமைகளை கையாள இன்ஜின் 8 வேக தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய MG க்ளோஸ்டர் மாடலில் பனோரமிக் சன்ரூஃப், மூன்று பயணிகளுக்கான நடுத்தர வரிசையில் பெஞ்ச் சீட், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் ஆகியவையும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் அம்சமும் உள்ளது.
பல ஏர்பேக்குகள், லெவல் 1 தன்னாட்சி ஓட்டுநர் அமைப்பு, தானியங்கி அவசர பிரேக்கிங் மற்றும் முன்னோக்கி மோதுதல் எச்சரிக்கை ஆகியவை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கும்.
இது iSMART இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் 12.3 அங்குல HD தொடுதிரை இன்போடெயின்மென்ட் பேனலையும் கொண்டுள்ளது.
இந்தியாவில், எம்ஜி க்ளோஸ்டர் 7-சீட்டர் மாடலின் டெல்லி, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.37.28 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுளது.
0
0