சீன நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த அம்பானி | காரணம் இதுதான்! | MG Motor partners Reliance Jio

Author: Dhivagar
3 August 2021, 6:12 pm
MG Motor partners Reliance Jio for new mobility solutions
Quick Share

SAIC மோட்டார் எனும் சீன நிறுவனத்தின் துணை நிறுவனமான எம்ஜி மோட்டார், இந்தியாவில் விரைவில் வரவிருக்கும் தனது புதிய SUV காரில், பயணத்தின்போது தடையில்லா இணைய சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் MG ZS மின்சார SUV யின் பெட்ரோல்  மாடலுக்கு ஜியோ 4ஜி இணைய சேவையை வழங்கும். 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இணைய சேவை வழங்குநராக இருப்பதால், எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

சீன நிறுவனத்துக்கு சொந்தமான இந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இங்கிலாந்தைத் தலமாக கொண்டு இயங்குகிறது. மேலும் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்ததை குறித்து அந்நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது அதிவேக 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் MG ZS எலக்ட்ரிக் SUV இன் பெட்ரோல் மூலம் இயங்கும் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

விரைவில் புதியதாக அறிமுகம் ஆகவுள்ள நடுத்தர அளவிலான  MG ZS பெட்ரோல் வேரியண்டின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமை அமைக்க ரிலையன்ஸ் ஜியோ உடன் கூட்டணி அமைத்துள்ளது. இது பயனர்களுக்கு ட்ரெண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் நிகழ்நேர டெலிமாடிக்ஸ் ஆகியவற்றை அணுக உதவியாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது 5ஜி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விரைவில் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யவும் உள்ளது.

Views: - 236

0

0