Mi 11 அல்ட்ரா: வெளியீட்டுக்கு முன்னதாகவே விலை விவரங்கள் கசிந்தது!
5 April 2021, 5:16 pmMi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, தொலைபேசியின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.
Gadgets360 இன் அறிக்கையின்படி, Mi 11 அல்ட்ரா இந்திய சந்தையில் ரூ.70,000 ஆரம்ப விலையுடன் வாங்கக்கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை எனில், சியோமியின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கக்கூடும் இருக்கலாம்.
மேலும், சியோமி ஆரம்பத்தில் Mi 11 அல்ட்ராவை உள்நாட்டில் உற்பத்தி செய்யாது என்றும் அதன் ஆரம்ப அலகுகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் என்றும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதனால் சில இறக்குமதி வரி சுமையின் விளைவாக ஸ்மார்ட்போனின் விலை பாதிக்கப்படும்.
Mi 11 அல்ட்ராவின் முக்கிய அம்சங்களில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 12 ஜிபி ரேம், வளைந்த 120 Hz QHD+ டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5000 mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
Mi 11 அல்ட்ரா சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 5,999 (தோராயமாக ரூ.66,400) ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 6,499 (தோராயமாக ரூ.72,000) ஆகவும், மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 6,999 (தோராயமாக ரூ.77,500) ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
0
0