i7-11370H செயலியோடு தரமாக களமிறங்கியது Mi நோட்புக் புரோ X15 லேப்டாப் | விலை & விவரங்கள்

Author: Dhivagar
30 June 2021, 7:42 pm
Mi Notebook Pro X 15 launched with 11th Gen Intel Core processor
Quick Share

மடிக்கணினி பிரிவில் சியோமி சில நல்ல மடிக்கணினிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சியோமி நிறுவனம் சீனாவில் புதிய Mi நோட்புக் புரோ X15 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த மடிக்கணினி 11 வது ஜென் இன்டெல் கோர் செயலி மற்றும் 3.5K OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

11 வது தலைமுறை இன்டெல் கோர் i5-11300H செயலி, 16 ஜிபி RAM மற்றும் 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் உடன் கூடிய மடிக்கணினியின் அடிப்படை மாடல் CNY 7,999 (தோராயமாக ரூ.92,100) விலைக் கொண்டுள்ளது. 

இன்டெல் கோர் i7-11370H செயலி, 32 ஜிபி RAM மற்றும் 1 TB SSD ஸ்டோரேஜ் உடன் கூடிய டாப் மாடல் CNY 9,999 (தோராயமாக ரூ.1,15,100) விலை கொண்டுள்ளது. மடிக்கணினிகள் சீனாவில் முன்பதிவு செய்ய கிடைக்கின்றன. மடிக்கணினிகளுக்கான விற்பனை ஜூலை 9 முதல் தொடங்கும்.

மடிக்கணினி எப்போது மற்ற சந்தைகளில் வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Mi நோட்புக் புரோ X15 விவரக்குறிப்புகள்

சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய லேப்டாப் 15.6 இன்ச் (3,456 × 2,160 பிக்சல் ரெசல்யூஷன்) சாம்சங் E4 OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 261 ppi பிக்சல் அடர்த்தி, 600 நைட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 16:10 விகிதத்தைக் கொண்டுள்ளது. இதனுடன் 100 சதவீதம் sRGB மற்றும் DCI-P3 வண்ண வரம்பு கிடைக்கும்.

லேப்டாப் 11 வது தலைமுறை இன்டெல் கோர் i7 செயலி உடன் இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் Nvidia GeForce RTX 3050 Ti chip மூலம் கையாளப்படுகிறது. கூடுதலாக, 32 ஜிபி வரை LPDDR 4X RAM மற்றும் 1 TB வரை PCIe ஸ்டோரேஜ் உள்ளது.

இணைப்பு வசதிகளைப் பொறுத்தவரை புளூடூத் v.5.2 மற்றும் Wi-Fi 6, 2 x USB-A 3.2 Gen 2 ports, 1 x USB Type-C, Thunderbolt 4, 3.5mm ஹெட்போன் ஜேக் மற்றும் 1 x HDMI 2.1 போர்ட் ஆகியவை அடங்கும். மடிக்கணினி 80Whr பேட்டரியை பேக்கைக் கொண்டிருக்கும், இது 11.5 மணிநேர வீடியோ பிளேபேக்கை ஒரே சார்ஜிங் உடன் வழங்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய, 130W யூ.எஸ்.பி டைப்-C சார்ஜரும் வழங்கப்படும்.

கூடுதல் அம்சங்களில் DTS ஆடியோ உடன் இயங்கும் குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 2 × 2 மைக்ரோஃபோன் வரிசை, 720p வெப்கேம், பேக்லிட் கீபோர்டு, உள்ளமைக்கப்பட்ட சுற்றுப்புற சென்சார் மற்றும் கீபோர்டில் சரிசெய்யக்கூடிய விளக்குகள் ஆகியவை அடங்கும். இந்த லேப்டாப் விண்டோஸ் 10 Home இல் இயங்குகிறது.

Views: - 207

0

0