மைக்ரோமேக்ஸ் In நோட் 1 அடுத்த விற்பனை தேதி தெரிஞ்சிக்கணுமா? மிக மிக விரைவில்…!

26 November 2020, 11:37 am
Micromax In Note 1 Next Sale Date Announced; To Go On Sale On December 1
Quick Share

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை கடந்த நவம்பர் 24 முடிந்தது. கைபேசியைப் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் தவறவிட்டிருந்தால், டிசம்பர் 1 ஆம் தேதி மீண்டும் அதை வாங்க முடியும். டிசம்பர் 1 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் In 1b உடன் அதிகாரப்பூர்வமாக வெளியானது. மைக்ரோமேக்ஸ் In 1b போனின் முதல் விற்பனை இன்று  (நவம்பர் 26) 12 மணிக்கு ஆரம்பமாகிறது.

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 – விலை

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.10,999 விலைக்கு கிடைக்கும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.12,499 விலையில் கிடைக்கும்.

In நோட் 1 அம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 SoC செயலி உடன் அறிமுகம் செய்யப்பட்டது, இது கேமிங் மையப்படுத்தப்பட்ட செயலி அல்ல; இருப்பினும், இது எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தினசரி பணிகளை கையாள உதவுகிறது. முன்பக்கத்தில், கைபேசியில் 6.67 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

கேமரா பிரிவில், தொலைபேசியில் 48 MP முதன்மை சென்சார், 5 MP அகல-கோண லென்ஸ் மற்றும் இரண்டு 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் ஆழ சென்சார்கள் அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. ரூ. 10,999 விலையில், கேமரா அம்சங்கள் நன்றாகவே உள்ளது, மேலும் இது 16MP முன் கேமரா சென்சார் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு.

ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வரும் சாதனத்தை 5,000 mAh பேட்டரி எரிபொருளாகக் கொண்டுள்ளது. இணைப்பிற்கு, இது 4 ஜி VoLTE, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / A-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ தலையணி ஜேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கடைசியாக, கைரேகை சென்சார் பின்புற கேமராவுக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், கவர்ந்திழுக்கும் கேமரா அம்சங்களுடன் மைக்ரோமேக்ஸ் In நோட் 1 சிறப்பான ஒரு  ஸ்மார்ட்போன் ஆகவே கருதப்படுகிறது.

Views: - 0

0

0