முதல்முறையாக மைக்ரோமேக்ஸ் In நோட் 1 இன்று விற்பனை! விலை, சலுகைகள் & விற்பனை விவரங்கள் இங்கே

24 November 2020, 8:46 am
Micromax In Note 1 To Go On First Sale Today At 12PM Via Flipkart
Quick Share

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் 1B இரண்டுமே இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இப்போது, ​​மைக்ரோமேக்ஸ் In நோட் 1 முதல் முறையாக இன்று (நவம்பர் 24) பிளிப்கார்ட் வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கைபேசி பச்சை மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கும். பிளிப்கார்ட்டில் மைக்ரோமேக்ஸ் In நோட் 1 In போனின் விலை மற்றும் விற்பனை சலுகைகளை இங்கே பாருங்கள்.

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 – விலை மற்றும் விற்பனை விவரங்கள்

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.10,999 விலையும், 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ.12,499 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் பல வங்கி சலுகைகள், பரிமாற்ற சலுகைகளைப் பெறலாம்.

ஃபெடரல் வங்கி டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 5 சதவீதம் வரம்பற்ற பணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் தள்ளுபடி ஆகியவைக் கிடைக்கும். தவிர, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை பயனர்களுக்கு மட்டுமே பரிமாற்ற சலுகை மற்றும் கட்டணமில்லாத EMI விருப்பம் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 விவரங்கள்

சிறந்த கேமரா, பேட்டரி திறன் கொண்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு தொலைபேசியை நீங்கள் தேடுகிறீர்களானால், மைக்ரோமேக்ஸ் In நோட் 1 ரூ.10,999 விலையில் வாங்க மிகவும் சிறந்தது. அம்சங்களைப் பொறுத்தவரையில், ​​2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்ட 6.67 அங்குல முழு HD+ IPS டிஸ்ப்ளே கிடைக்கும். மீடியாடெக் ஹீலியோ G85 செயலி மைக்ரோமேக்ஸ் In நோட் 1 போனில் செயலாக்கத்தைக் கையாளுகிறது, மேலும் மைக்ரோ SD ஸ்லாட்டுக்கான ஆதரவுடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

பின்பக்க பேனலில் X மாதிரி வடிவமைப்பு உள்ளது; இருப்பினும், கைபேசியின் வெள்ளை மாறுபாடு இந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை. தவிர, கைபேசி பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பிரத்யேக கூகிள் அசிஸ்டன்ட் பொத்தானையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 இல் இயங்கும் இந்த சாதனம் 5,000 mAh பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

புகைப்படம் எடுப்பதற்காக, கைபேசி 48MP பிரதான சென்சார், 5MP அகல-கோண லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட பின்புற பேனலில் குவாட்-கேமரா அமைப்பை வழங்குகிறது. செல்ஃபிக்களுக்கு, கைபேசியில் 16 MP செல்பி கேமரா உள்ளது.

Views: - 24

0

0