மைக்ரோசாஃப்ட் மீது இ-மெயில் சைபர் அட்டாக் நடத்திய சீனா | வெளியானது அதிர்ச்சி தகவல்கள்!

3 March 2021, 6:06 pm
Microsoft says China-linked group targets exchange email
Quick Share

முன்னதாக கண்டுபிடிக்கப்படாத பல குறைபாடுகளைப் பயன்படுத்தி சில வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், தொடர்புகள் மற்றும் காலெண்டர் மென்பொருளில் சீனாவை தளமாகக் கொண்டு அரசு நிதியுதவி உடன்  இயங்கும் ஹேக்கர்கள் குழு ஹேக் செய்து ஊடுருவியுள்ளதாக மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் சீனா மீது சைபர் அட்டாக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதுள்ளது. 

இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, பாதுகாப்பு மென்பொருள் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்யுமாறு மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சேவையகத்தை ஹேக் செய்து உள்நுழைந்து, மைக்ரோசாஃப்ட் மின்னஞ்சல் கணக்குகளுக்குள் நுழைந்து மால்வேர்களை இன்ஸ்டால் செய்ய முயற்சித்ததாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

முன்னர் கண்டுபிடிக்கப்படாத பாதிப்புகள் ஜீரோ டேஸ் என அழைக்கப்படுகின்றன, மேலும் புதிதாக பேட்ச்கள் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படும் முன்பு அவை ஹேக்கர்களுக்கு உதவியாக மாறிவிடுகின்றன.

மைக்ரோசாஃப்ட் வலைப்பதிவின் தெரிவித்துள்ள தகவலின்படி, ஹேக்கர்கள் சீனாவிற்கு வெளியே இருந்தும்  செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் பொதுவாக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிறுவனங்கள், உயரிய பதிவியில் இருப்பவர்கள் உட்பட பல தொழில் துறைகளில் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களை குறிவைக்கின்றனர் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

Views: - 2

0

0