சக்திவாய்ந்த CPU உடன் Microsoft Surface Laptop 4 அறிமுகம் | விலை & விவரங்கள் இதோ

14 April 2021, 6:01 pm
Microsoft Surface Laptop 4 laptop launched with powerful CPU, know the price
Quick Share

புகழ்பெற்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் பல தரமான  அம்சங்களுடன் சர்ஃபேஸ் லேப்டாப் 4 ஐ அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கனடாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மடிக்கணினி 13.5 அங்குலங்கள் மற்றும் 15 அங்குலங்கள் கொண்ட இரண்டு திரை அளவுகளில் கிடைக்கிறது. 

இந்த லேப்டாப்பில் 720p HD வெப்கேம் மற்றும் வலுவான ஒலிக்கு ஆம்னிசோனிக் (Omnisonic) ஸ்பீக்கர்கள் உள்ளன. இது தவிர, பயனர்கள் மடிக்கணினியில் சக்திவாய்ந்த செயலியையும் பெறுவார்கள்.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் 4 மடிக்கணினி விவரக்குறிப்புகள்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் 4 லேப்டாப், 13.5 மற்றும் 15 அங்குலங்கள் ஆகிய இரண்டு திரை அளவுகளில் கிடைக்கிறது, அவை முறையே 2,256×1,504 பிக்சல்கள் மற்றும் 2,496×1,664 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டவை. மேலும், அதன் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் மாடல்களில் 11 தலைமுறை இன்டெல் கோர் i7-1185 G7 செயலி உள்ளது.

பேட்டரி விவரங்கள்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் 4 லேப்டாப்பின் இரண்டு திரை வகைகளிலும் நிறுவனம் வலுவான பேட்டரியை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் தகவலின்படி, இந்த லேப்டாப்பின் 13.5 ஸ்கிரீன் மாடலின் பேட்டரி ஒரே சார்ஜிங் உடன் 19 மணிநேர பேக்அப்பையும், 15 அங்குல திரை மாதிரியின் பேட்டரி 17.5 மணிநேர பேக்அப்பையும் வழங்கக்கூடியது. 

பிற அம்சங்களைப் பொறுத்தவரையில், ​​பயனர்கள் மடிக்கணினியில் வைஃபை 6, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-A போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 விலை

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 இன் 13.5 அங்குல திரை அளவு கொண்ட மாடலுக்கு $999 விலையில் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.75,200 விலை நிர்ணயித்துள்ளது. AMD Ryzen 5 + 8GB + 256GB சேமிப்பு வகைகள் இந்த விலையில் கிடைக்கும். 

இதன் இன்டெல் கோர் i5 + 8 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை $1,299 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.97,700 ஆகும். மறுபுறம், அதன் 15 அங்குல திரை மாடலின் விலை $1,299 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 97,567 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

Views: - 31

0

0