இரண்டே நாட்களில் மோட்டோ G 5ஜி இந்தியாவில்… நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

27 November 2020, 10:36 am
Moto G 5G is now set for release on 30th of November in India and will be available for purchase on Flipkart.
Quick Share

மோட்டோரோலா தனது சமீபத்திய G சீரிஸ் சாதனத்திற்கான வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மோட்டோ G 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த சாதனம் பிளிப்கார்ட்டில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கும்.

மோட்டோரோலா தனது ட்விட்டர் கணக்கு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மோட்டோ G 5ஜி போனை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பிருந்தே கூறப்பட்டு வந்தது. இப்போது வெளியீட்டு தேதியுடன் வருகையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மோட்டோ G 5ஜி விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 299 யூரோக்கள் (தோராயமாக ரூ.26,150) ஆகும், ஆனால் ட்வீட்டின் படி, மோட்டோ G 5ஜி ‘இந்தியாவின் மிகவும் மலிவு 5ஜி ஸ்மார்ட்போன்’ ஆக இருக்கும், எனவே இதன் விலை ஐரோப்பிய விலையை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 மோட்டோ G 5ஜி விவரக்குறிப்புகள்

மோட்டோ G 5ஜி 6.7 இன்ச் முழு HD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது. உட்புறத்தில், ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 G 5ஜி செயலி உடன் இயக்கப்படுகிறது. இந்த தொலைபேசி 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.

பாதுகாப்பிற்காக, தொலைபேசியில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் உள்ளன. மோட்டோ G 5ஜி 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 OS உடன் இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றின் கலவையுடன் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Views: - 0

0

0