மார்ச் 9 அன்று வெளியாகிறது இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்!
5 March 2021, 6:36 pmமோட்டோ G தொடரின் கீழ் மோட்டோ G10 பவர் மற்றும் மோட்டோ G30 ஆகியவை மார்ச் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று மோட்டோரோலா இன்று உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டு நிகழ்வு மார்ச் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும்.
மோட்டோ G10 பவர் மற்றும் மோட்டோ G30 ஆகியவை பிளிப்கார்ட்டில் மட்டும் கிடைக்கும் பிரத்தியேக ஸ்மார்ட்போன்களாக இருக்கும். வரவிருக்கும் G-சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கான வலைத்தள பக்கம் இப்போது பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. மோட்டோ G10 பவர் ஒரு பெரிய 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் G10 இன் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.
மோட்டோரோலா கடந்த மாதம் ஐரோப்பாவில் மோட்டோ G10 மற்றும் மோட்டோ G30 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. மோட்டோ G30 போனின் விலை 180 யூரோக்கள் (தோராயமாக ரூ.15,900) மற்றும் இது பாஸ்டல் ஸ்கை மற்றும் பாண்டம் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது. மோட்டோ G10 விலை 150 யூரோ (தோராயமாக ரூ.13,300) மற்றும் அரோரா கிரே மற்றும் இரைடிசென்ட் பேர்ல் வண்ணங்களில் வருகிறது.
0
0