108MP பின்புற கேமராவுடன் மோட்டோரோலா எட்ஜ் 20 சீரிஸ் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
30 July 2021, 5:32 pm
Motorola Edge 20 series, with a 108MP rear camera, launched
Quick Share

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்ட் தனது சமீபத்திய எட்ஜ் 20 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எட்ஜ் 20 லைட், எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 ப்ரோ மாடல்களை உள்ளடக்கிய இந்த வரிசை €350 (தோராயமாக ரூ.31,000) விலையில் கிடைக்கிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த மூன்று மாடல்களும் 144 Hz டிஸ்பிளேக்கள், 108 MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 11 OS மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 20 சீரிஸ் ஒரு பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது மூன்று கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும்.

எட்ஜ் 20 லைட் 90 Hz, 6.7 இன்ச் OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதேசமயம் எட்ஜ் 20 மற்றும் 20 ப்ரோ 144 Hz, 6.7 இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. இவை முழு HD+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது.

கைபேசிகள் ஒவ்வொன்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன.

எட்ஜ் 20 லைட் 108 MP மெயின் ஸ்னாப்பர், 8 MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2 MP ஆழம் கொண்ட லென்ஸைக் கொண்டுள்ளன.

எட்ஜ் 20 இல் 108 MP பிரைமரி சென்சார், 16 MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 8 MP டெலிஃபோட்டோ ஸ்னாப்பர் 3x ஆப்டிகல் ஜூம் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளது.

எட்ஜ் 20 ப்ரோ வெண்ணிலா மாடலைப் போன்ற கேமரா ஏற்பாட்டைக் கொண்டுள்ளது, ஆனால் 8 MP பெரிஸ்கோப் லென்ஸ் 5x ஆப்டிகல் ஜூம் ஆதரவை வழங்குகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 லைட் மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியிலிருந்து ஆற்றல் பெற்று இயங்குகிறது.

எட்ஜ் 20 ஸ்னாப்டிராகன் 778G செயலி மற்றும் 4,000 mAh பேட்டரி உடன் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் 20 ப்ரோ ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மற்றும் 4,500 mAh பேட்டரி உடன் இயக்கப்படுகிறது.

அவை 12 ஜிபி RAM, 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 20 லைட் மாடலின் விலை €350 (தோராயமாக ரூ. 31,000) ஆகவும், எட்ஜ் 20 மாடலின் விலை  €500 (தோராயமாக ரூ.44,000) ஆகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

எட்ஜ் 20 ப்ரோ மாடலின் விலை €700 (தோராயமாக ரூ.61,800) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசிகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாங்குவதற்கு கிடைக்கும் மற்றும் ஐரோப்பா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் கிடைக்கும்.

Views: - 135

0

0