ரூ.13,999 ஆரம்ப விலையில் மோட்டோரோலா ரெவோ, ZX2 ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்! முழு விவரம் அறிக

Author: Dhivagar
10 October 2020, 1:31 pm
Motorola Revou, ZX2 smart TVs launched in India
Quick Share

பிளிப்கார்ட் இந்தியாவில் புதிய அளவிலான மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள், அடிப்படை மாடல் ஆன 32 அங்குல டிஸ்பிளே மாடலுக்கு ரூ.13,999 விலையுடன் துவங்குகிறது. மொத்தத்தில் நான்கு புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் உள்ளன.

புதிய ஸ்மார்ட் டிவிகள் இரண்டு வெவ்வேறு வரம்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மோட்டோரோலா ரெவோ பிரீமியம் மாடல், ZX2 பட்ஜெட் மாடலாக உள்ளது. 

மோட்டோரோலா ரெவோ 55 இன்ச் UHD டிவியின் விலை ரூ.50,000, 43 இன்ச் மாடலின் விலை ரூ.30,999. மோட்டோரோலா ZX2 32 இன்ச் HD ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999, மற்றும் 40 இன்ச் FHD ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,999 ஆகும். புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் அக்டோபர் 15 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும்.

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, மோட்டோரோலா ரெவோ மற்றும் ZX2 ஸ்மார்ட் டிவிகள் 1.5 GHz CA53 குவாட் கோர் செயலி உடன் இயக்கப்படுகின்றன, அவை 2 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன. மோட்டோரோலா ரெவோ 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வழங்குகிறது, ZX2 ரேஞ்ச் 16 ஜிபி உடன் வருகிறது. 

நான்கு ஸ்மார்ட் டிவிகளும் ஆண்ட்ராய்டு 10 டிவி உடன் இயங்கும். ஸ்மார்ட் டிவிகளில் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, டால்பி ஸ்டுடியோ சவுண்ட், டால்பி விஷன் மற்றும் HDR 10 ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மோட்டோரோலா ரெவோ ஸ்மார்ட் டிவிகளில் சவுண்ட்பார் இணைக்கப்பட்ட மிக மெல்லிய பெசல்கள் மற்றும் கீழே ஒரு ஸ்டாண்ட் உள்ளது. 55 இன்ச் மாடலில் இரண்டு ஸ்பீக்கர்களும், இரண்டு ட்வீட்டர்கள் 50W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. மோட்டோரோலா ZX2 இல் இரண்டு ஸ்டாண்டுகள் உள்ளன, ஆனால் சவுண்ட்பார் இல்லை. மோட்டோரோலா ZX2 ஸ்மார்ட் டிவிகளில் இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்கள் உள்ளன மற்றும் மொத்தம் 40W ஒலி வெளியீட்டை வழங்குகின்றன.

ஸ்மார்ட் டிவிகளுடன் மோட்டோரோலா ஸ்மார்ட் சாதனங்களையும் பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் ஸ்மார்ட் AC, குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் உள்ளன. மோட்டோரோலா ஸ்மார்ட் சாதனங்களும் பிக் பில்லியன் நாட்களில் விற்பனைக்கு வரும்.

Views: - 66

0

0