ஆண்டுராய்டு பயனர்களை கவர மற்றொரு புதிய அம்சத்தை சேர்க்கும் நெட்ஃபிலிக்ஸ்…உங்களுக்கு யூஸ் ஆகுமா பாருங்க !!!

Author: Hemalatha Ramkumar
5 October 2021, 3:44 pm
Quick Share

நெட்ஃபிலிக்ஸ் தனது ‘Play Something’ டூலினை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொலைக்காட்சிகளுக்காக அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் ஸ்ட்ரீமிங் சேவையின் UI முழுவதும் ஒரு பட்டனைச் சேர்க்கிறது. இந்த அம்சமானது நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய சீரிஸ் மற்றும் திரைப்படங்களைத் தானாகவே உங்களுக்கு பரிந்துரைக்கும்.

நெட்ஃபிலிக்ஸ் அதன் ‘Play Something’ அம்சத்தை இப்போது ஆண்ட்ராய்டில் உள்ள அனைத்து நெட்ஃபிலிக்ஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கெட்டுகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது. பயனர்கள் முன்பு பார்த்ததைப் பொறுத்து புதிய கண்டண்ட்களைக் கண்டறிய இந்த அம்சம் உதவுகிறது.

நெட்ஃபிலிக்ஸ் -ன் இந்த புதிய அம்சமானது பல ஸ்ட்ரீமிங் சேவைகளால் வழங்கப்படும் ‘Shuffle’ என்ற அம்சத்திற்கு ஒத்ததாகும். ப்ளே சம்த்திங் அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப்பில் சிறிது நேரம் இருந்து வருகிறது. இப்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் அதற்கான அணுகலைப் பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தி வெர்ஜின் அறிக்கையின்படி, iOS பயனர்கள் உடனடியாக இந்த அம்சத்தைப் பெற மாட்டார்கள். அதிர்ஷ்டவசமாக, நெட்ஃபிலிக்ஸ் எதிர்காலத்தில் iOS இல் பிளே சம்த்திங் சோதிக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதன் பொருள் ஐபோன் மற்றும் ஐபேட் அம்சத்தை அனுபவிக்க அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

கூடுதலாக, நெட்ஃபிலிக்ஸ் ‘Fast Laughs’ என்ற மற்றொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான டிக்டோக் போன்ற அம்சமாகும். இது மார்ச் மாதத்தில் iOS இல் வெளியிடப்பட்டது. அதன் பிரபலமான நகைச்சுவைத் தொடர், திரைப்படங்கள் மற்றும் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல்களின் காட்சிகளைக் காட்டும் பிரத்யேக டேபினை வழங்குகிறது.

இந்த அம்சம் இப்போது ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கெட்டுகளில் தொடங்கப்படுகிறது.

நெட்ஃபிலிக்ஸ் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘Downloads for You’ கருவியை அடுத்த மாதம் iOS இல் அறிமுகப்படுத்துவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது, ​​பார்க்கும் வரலாற்றின் அடிப்படையில் ஆஃப்லைனில் பார்க்க திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டவுன்லோட் செய்யும் விருப்பம் Android சாதனங்களில் மட்டுமே உள்ளது.

Views: - 512

0

0