அடுத்த முப்பது நாட்களுக்கு வீடியோக்களின் தரத்தை குறைத்த நெட்ஃபிலிக்ஸ்;யூடியூப், பேஸ்புக், அமேசான் ப்ரைம்????

25 March 2020, 5:00 pm
Quick Share

கொரோனா வைரஸால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இதனால் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு இன்டர்நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நெட்ஃபிலிக்ஸ் தங்களது வீடியோக்களின் தரத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த முப்பது நாட்களுக்கு தங்கள் தளத்தில் உள்ள அனைத்து வீடியோக்களின் தரம் குறைக்கப்படும் என நெட்ஃபிலிக்ஸ் கூறியுள்ளது. இதனால் மொபைல் மற்றும் பிராட் பேண்டுகளின் ட்ராஃபிக் குறைக்கப்படும் என்பதன் முயற்சியே இது. மேலும் கொரோனா பற்றிய முக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள இன்டர்நெட்டை பயன்படுத்தி வேண்டும் என்ற நோக்கத்தோடு நெட்ஃபிலிக்ஸ் இதனை செய்துள்ளது.

ஆனால் இது நெட்ஃபிலிக்ஸ் வீடியோக்களின் ரெசல்யூஷனை எந்த வகையிலும் குறைக்காது. விஷயம் என்னவென்றால் ரெசல்யூஷனில் மாற்றம் இல்லாமல் போனாலும் அதன் தரம் குறைந்து விடும். மேலும் எந்த அளவிற்கு பிட் ரேட்டை குறைக்க போகிறது என்ற தகவலை நெட்ஃபிலிக்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை.

நெட்ஃபிலிக்ஸை சேர்ந்த கன்டன்ட் டெலிவரி VP  யான கென் ஃபிளோரன்ஸ் இது பற்றி,”தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு நெட்ஃபிலிக்ஸ் ட்ராஃபிக்கை 25 சதவீதமாக குறைத்து, அதே சமயம் வீடியோக்களின் தரம் குறையாமல் பார்த்து கொள்ளப்படும்.” என தெரிவித்தார். 

நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியாவது,”தரமான வீடியோக்களை நெட்ஃபிலிக்ஸ் பயனாளர்கள் தொடர்ந்து பெறுவார்கள். இப்போதுள்ள பிரச்சனையை சமாளிக்க அடுத்த முப்பது நாட்களுக்கு இந்த முயற்சி பெரிதும் கைக்கொடுக்கும் என நம்புகிறோம். 

வை ஃபையின் வேகம் குறைந்து விட்டதாக இன்டர்நெட் பயனாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிகப்படியான சாதனங்கள் பயன்படுத்தப்படுவதே இதற்கு முக்கிய காரணம். இதனால் செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Cellular Operator Association of India) அவர்களது பேண்டுவித்தை குறைக்கப் போவதாக கூறியுள்ளது.

ஐரோப்பில் ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ போன்றவைகளும் இதே போன்ற முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளனர். EU அதிகாரி தியரி பிரட்டான் என்பவர் இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களது வீடியோ தரத்தை குறைத்து கொள்ளுமாறு கூறினார். அவர் பேசிய நிறுவனங்களில் பேஸ்புக்கும் யூடியூப்பும் அடங்கும். இதனை மதிக்கும் விதமாக யூடியூப் தங்களது வீடியோ தரத்தை குறைத்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான யூடியூப் இது போன்ற எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை என்றாலும் இந்த முயற்சியை பின்பற்றும் நோக்கில் தான் இருக்கும். யூடியூப் இதனை செய்து விட்டால் உடனடியாக பேஸ்புக்கும் அதனை பின்பற்றும்.