செம சூப்பர்…முதல் வீடியோ கேமை வெளியிட்ட நெட்ஃபிலிக்ஸ்…!!!

Author: Hemalatha Ramkumar
29 September 2021, 5:30 pm
Quick Share

நெட்ஃபிலிக்ஸ் வீடியோ கேம் கிரியேட்டர் நைட் ஸ்கூல் ஸ்டுடியோவை வாங்கி ஐந்து மொபைல் கேமிங் தலைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில், நிறுவனம் வெளியிட்டது.
நிறுவனம் இதனை செவ்வாய்க்கிழமை அன்று கூறியது. ஸ்ட்ரீமிங் இடத்தில் தீவிரமான போட்டிக்கு மத்தியில் வருவாய் ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதாக தெரிகிறது.

நைட் ஸ்கூல் ஸ்டுடியோ என்பது இந்த நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்டுடியோ வாங்குதல் ஆகும். அதன் சிறந்த அறிமுக விளையாட்டு, “ஆக்ஸென்ஃப்ரீ”, (Oxenfree) ஒரு அசாதாரண டீன் த்ரில்லர் மற்றும் ஒரு விசித்திரமான ஒலிப்பதிவினை கொண்டுள்ளது.

சோனியின் பிளேஸ்டேஷன், மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ ஸ்விட்ச் மற்றும் PCக்களில் கிடைக்கும் ஸ்டுடியோவின் கேம்கள், ஸ்ட்ரீமிங் ஜையண்ட்டான நெட்ஃபிலிக்ஸில் புதிதாக உருவாக்கப்பட்ட வீடியோ கேம் போர்ட்ஃபோலியோவில் முதல் மொபைல் அல்லாத தலைப்புகள் ஆகும்.

“எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் போலவே, இந்த விளையாட்டுகள் அனைத்தும் உங்கள் நெட்ஃபிலிக்ஸ் மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக சேர்க்கப்படும், அதுவும் விளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இன் ஆப் பர்சேஸ் (in app purchase) இல்லாமல்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெட்ஃபிக்ஸ் தனது கடைசி காலாண்டு வருவாயின் போது கேமிங்கில் நுழைவதற்கான திட்டங்களை குறிப்பிட்டுள்ளது, ஏனெனில் டிஸ்னி+ மற்றும் எச்.பி.ஓ மேக்ஸ் உள்ளிட்ட புதிய வீரர்கள் விரைவாக சந்தாதாரர்களைப் பெறுகின்றனர், ஸ்ட்ரீமிங் நிலப்பரப்பில் போட்டியை தீவிரப்படுத்தினர்.

ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள நெட்ஃபிலிக்ஸ் உறுப்பினர்களுக்கு ஆண்ட்ராய்டில் Stranger Things: 1984”, “Stranger Things 3: The Game”, “Card Blast”, “Teeter Up” and “Shooting Hoops” தலைப்புகளை அறிமுகப்படுத்தியதாக அந்நிறுவனம் கூறியது. போலந்தில் ஏற்கனவே “Stranger Things” கிடைக்கும் பட்சத்தில், மற்ற மூன்றினையும் பெறும்.

“அசல் திரைப்படங்கள், அனிமேஷன் மற்றும் எங்கள் விரிவாக்கத்தைப் போலவே, கேமிங்கை எங்களுக்கான மற்றொரு புதிய உள்ளடக்க வகையாக நாங்கள் பார்க்கிறோம். ”இவ்வாறு நிறுவனம் அதன் பங்குதாரர் கடிதத்தில் கூறியது.”

Views: - 344

0

0