அடிதூள்…என்னது நெட்ஃபிலிக்ஸில் வீடியோகேமா… பயனர்களுக்கு கொண்டாட்டம் தான்!!!
Author: Hemalatha Ramkumar28 September 2021, 4:26 pm
நெட்ஃபிலிக்ஸ் இன்க் கோ-சீஃப் எக்ஸிகியூடிவ் ஆபிசர் டெட் சரண்டோஸ், “கேமிங்கிற்கு விரிவுபடுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் திட்டத்தின் நேரம் தற்போது தெரியவில்லை” என்று கூறினார்.
திங்களன்று கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்த கோட் மாநாட்டில் வீடியோ கேம்களை அறிமுகப்படுத்துவது பற்றி சரண்டோஸ் விவாதித்தார். இந்த நடவடிக்கைக்கு கடினமான காலக்கெடு இல்லை என்று கூறினார். ஜூலை மாதத்தில் முதலில் ப்ளூம்பெர்க்கில் அறிவிக்கப்பட்ட இந்த செய்தியின்படி, நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் அசல் மற்றும் உரிமம் பெற்ற விளையாட்டுகள் உருவாக உள்ளதை உறுதிப்படுத்தியது.
வீடியோ கேம்களின் இந்த புது ஐடியா டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு அப்பால் நெட்ஃபிலிக்ஸின் முதல் குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது. மேலும் வோல் ஸ்ட்ரீட் இந்த நடவடிக்கையை சில அச்சத்துடன் பார்த்தது. ஆனால் இந்த அம்சம் ஏற்கனவே இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என நம்பலாம்.
மாநாட்டில், நெட்ஃபிலிக்ஸ் ஒரு சினிமா சங்கிலியை (Cinema chain) வாங்கலாம் என்ற எண்ணத்தையும் சரண்டோஸ் கூறினார். இந்த ஸ்ட்ரீமிங் தளத்தில் சினிமா தியேட்டர்களின் அனுபவத்தை பெறலாம் என்றும் அவர் கூறினார். ஆனால் அவை அதிக விலைக்கு மாறும். மேலும் நெட்ஃபிலிக்ஸ் இசை வெளியீடுகளை செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.
0
0