இப்படி ஒரு அம்சத்தை ஜூம் செயலியிடம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டீங்க!!!

18 November 2020, 10:27 pm
Quick Share

வீடியோ சாட்களைப் பாதுகாக்க ஜூம் செயலி புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளில் ஒன்றான ஜூம், கடந்த காலங்களில் சாட்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பயனர்கள் தங்கள் மீட்டிங்கை பாதுகாக்க உதவும் புதிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

ஹோஸ்ட்கள் மற்றும் கோ  ஹோஸ்ட்கள் இப்போது ஒரு கூட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, தேவையற்ற பங்கேற்பாளர்களை வெளியேற்றும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர். “சஸ்பெண்ட் பார்டிசிபண்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம். வீடியோ, ஆடியோ, சந்திப்பின் போது சாட்டிங், அனடேஷன், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த நேரத்தில் நிறுத்தப்படும். இது நடக்கும்போது பிரேக்அவுட் அறைகளும் கிடைக்காது. அனைத்து இலவச மற்றும் கட்டணம் செலுத்தும்  பயனர்களுக்கும் இந்த அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டுள்ளது. 

இப்போது பங்கேற்பாளர்கள் ஜூம் கிளையண்டிலிருந்து நேரடியாக மேல்-இடது பாதுகாப்பு பேட்ஜைக் கிளிக் செய்வதன் மூலம் தொந்தரவு செய்யும் பயனரைப் புகாரளிக்கலாம். முன்னதாக, இந்த அனுமதி ஹோஸ்ட்கள் மற்றும் கோ  ஹோஸ்ட்களுக்கு மட்டுமே இருந்தது. பங்கேற்பாளர்கள் எந்தவொரு பயனரையும் புகாரளிக்க முடிவு செய்யும் போது அறிக்கை ஜூம் செயலிக்கு அனுப்பப்படும். 

இருப்பினும், ஓனர்கள் மற்றும் அட்மின்கள் வெப் செட்டிங்கில் மாற்றம் செய்வதன் மூலம்  பங்கேற்பாளர்களுக்கு அனுமதி தரலாம். 

சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத்தளங்களில் மீட்டிங் சம்மந்தப்பட்ட ID மற்றும் லின்குகள் இருப்பதால் தேவையில்லாத பயனர்கள் மீட்டிங்கில் பங்குபெறுகின்றனர். இது பெரும்பாலும் பல இடையூறுகளை விளைவிக்கிறது. புதிய ‘அட் ரிஸ்க் மீட்டிங் நோட்டிஃபையர்’, தேவையற்ற பங்கேற்பாளர்களிடமிருந்து ஒரு சந்திப்பு ஆபத்தில் இருப்பதைப் பற்றி கணக்கு உரிமையாளரை எச்சரிக்கும். 

ஒரு கருவியின் உதவியுடன் அவர்கள் ஆபத்தை கண்டுபிடிப்பதாக ஜூம் கூறுகிறது. இது பொது சமூக ஊடக இடுகைகள் மற்றும் பிற வலைத்தளங்களை பகிரங்கமாக பகிரப்பட்ட ஜூம் சந்திப்பு இணைப்புகளுக்கு ஸ்கேன் செய்கிறது. சந்திப்பு ஐடிகள் மற்றும் பாஸ்வெர்டுகள் பொது தளங்களில் வெளியிடப்படாமல் இருப்பதை ஹோஸ்ட்கள் மற்றும் நிர்வாகிகள் வெறுமனே உறுதிப்படுத்த வேண்டும். ஒரு சந்திப்பு ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டால், பாதுகாப்பு அமைப்புகளை இயக்குவதன் மூலம் புதிய சந்திப்பு ஐடியை உருவாக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.