பெட்ரோல் நிலையங்களில் இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!

30 November 2020, 9:26 pm
Never make these mistakes at the petrol pump
Quick Share

பெட்ரோல் நிரப்ப நாம் செல்லும்போதெல்லாம், நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்கிறோம். இந்த தவறுகளை நீங்கள் செய்யும்போது பெரிய விபத்துக்கள் நேரவும் வாய்ப்புண்டு, அத்தகைய தவறுகளைத் தவிர்த்துக்கொண்டு பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள். அது போன்ற தவறுகள் என்ன அதனால் என்ன நேரும் என்பதையும் எப்படி பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். 

கார் இன்ஜின் ஆஃப்

பெட்ரோலை நிரப்பும்போது, கார் ஏற்கனவே சூடாக இருப்பதால் காரின் இன்ஜின் ஆஃப் செய்யப்பட வேண்டும், பெட்ரோல் நிரப்பும்போது, இன்ஜின் இயங்கினால் அதிக வெப்பம் காரணமாக தீ பிடிக்கவும் வாய்ப்புண்டு. எனவே முன்னெச்சரிக்கையாக இன்ஜின் ஆஃப் செய்யப்பட வேண்டும். 

மொபைல் போன்கள் கூடாது

பெட்ரோல் நிரப்பும் போது ஒருபோதும் போனில் பேசக்கூடாது, ஏனெனில் தொலைபேசியிலிருந்து வெளியேறும் வெப்பம், ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.

சிகரெட் பிடிக்கக்கூடாது 

சாதாரணமாகவே சிகரெட் புகைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுதான். ஆனால் பெட்ரோல் நிலையங்களில் காருக்கு பெட்ரோல் போடும்போது நீங்கள் சிகரெட் புகைத்தால், அது தீ விபத்துக்களை ஏற்படுத்தவும்கூடும்.

வெயில் காலங்களில் பெட்ரோல் டேங்க்  முழுவதுமாக நிரப்பக்கூடாது

கோடை காலத்தில், காரில் பெட்ரோலை அதிகமாக நிரப்ப வேண்டாம், ஏனெனில் அதனால் காற்று வெளியேற முடியாமல், இன்ஜினில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

Views: - 0

0

0