M1 செயலி உடன் வானவில் வண்ணங்களில் புதிய ஆப்பிள் iMac: விலைகள் மற்றும் முக்கிய அம்சங்கள்

22 April 2021, 6:06 pm
New Apple iMacs with M1 processor, rainbow colours
Quick Share

ஆப்பிள் தனது புதிய வரம்பிலான iMac இன் ஒன் டெஸ்க்டாப் கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனம் சமீபத்தில் நடத்திய ‘ஸ்பிரிங் லோடட்’ மெய்நிகர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய iMac களின் விலைகள், கிடைக்கும் விவரங்கள், விவரக்குறிப்புகள், அம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

iMac க்குகளின் விலை விவரங்கள் 

புதிய அளவிலான iMac கணினிகளின் விலைகள் ரூ.1,19,900 முதல் தொடங்கி பல்வேறு GPU மற்றும் சேமிப்பக விருப்பங்களின் அடிப்படையில் ரூ.1,39,900 மற்றும் ரூ.1,59,900 விலையிலும் கிடைக்கிறது. மே மாதத்தின் இரண்டாவது பாதியில் இவை கிடைக்கும் என்பதால் நீங்கள் இப்போது இந்தியாவில் வாங்க முடியாது. எவ்வாறாயினும், நிறுவனத்தின் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் குறிப்பிட்டுள்ளபடி ஏப்ரல் 30 முதல் அதை முன்கூட்டியே ஆர்டர் செய்ய முடியும்.

புதிய iMac க்கின் வானவில் வண்ணங்கள்

பல ஆண்டுகளாக ஆப்பிள் அதன் iMac டெஸ்க்டாப்புகளை வெறும் சில்வர் நிறத்திலும் சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் மட்டுமே அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், இந்த முறை அப்படி இல்லாமல் ஆப்பிள் நிறைய வண்ணங்களைச் சேர்த்துள்ளது மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு G3 மேக் கம்பியூட்டர்களில் இருந்ததைப் போலவே ரெயின்போ நிறத்திற்கு திரும்பியுள்ளது. 

இந்த புதிய iMac களும் நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா மற்றும் வெள்ளி வண்ணங்களில் வருகின்றன. 

M1 செயலியுடன் iMac  

இந்த புதிய iMac க்குகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், அவை இப்போது ஆப்பிளின் சொந்த M1 சிலிக்கான் சிப் உடன் இயங்குகிறது. இது கடந்த ஆண்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ மற்றும் மேக் மினி ஆகியவற்றில் அறிமுகமானது. நீங்கள் 8-Core CPU + 7-core GPU மற்றும் 8-core CPU இல் 8-core GPU உடன் இதை பெறலாம்.

மூன்று வகைகளில் iMac

அடிப்படை மாடல் மேஜிக் கீபோர்டு மற்றும் 8-Core CPU மற்றும் 7-Core GPU, 256 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM, 24 அங்குல 4.5K ரெடினா திரை, இரண்டு தண்டர்போல்ட்+ யூ.எஸ்.பி 4 போர்ட்களைக் கொண்டுள்ளது. 

இது நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் மட்டுமே வருகிறது. இரண்டாவது மாறுபாட்டில் 8-Core GPU, அதே RAM, ஸ்டோரேஜ் மற்றும் டிஸ்பிளே கொண்ட 8-Core CPU உள்ளது. இருப்பினும், இது கூடுதலாக இரண்டு யூ.எஸ்.பி 3 போர்ட்களை ஆதரிக்கிறது, ஜிகாபிட் ஈதர்நெட் மற்றும் டச் ஐடி உடன் மேஜிக் கீபோர்டையும் கொண்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த மாறுபாட்டில் 512 ஜிபி ஸ்டோரேஜ், அதே CPU மற்றும் GPU, அதே RAM, ஸ்டோரேஜ், டிஸ்பிளே, போர்ட்ஸ் மற்றும் வண்ணங்கள் உள்ளன.

Views: - 2846

0

0