புதிய ஹூண்டாய் i20 முன்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம் | இந்திய வெளியீடு மிக விரைவில்

27 October 2020, 7:32 pm
New Hyundai i20 bookings to open from tomorrow; India launch on 5 November
Quick Share

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹேட்ச்பேக் கார் ஆன புதிய i20 க்கான முன்பதிவுகளைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அக்டோபர் 28, 2020 முதல் ஹூண்டாய் டீலர்ஷிப்களில் அல்லது உற்பத்தியாளரின் இணையதளத்தில் ரூ.21,000 செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம்.

புதிய ஹூண்டாய் i20 பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வகைகளில் கிடைக்கும். இவற்றில் 1.2 லிட்டர் கப்பா மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஆகிய இரண்டு பெட்ரோல் இன்ஜின்கள் இடம்பெறும். 

முந்தையவை iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும், பிந்தையது ஐந்து வேக மேனுவல் மற்றும் IVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். டீசல் மோட்டார் 1.5 லிட்டர் இன்ஜினாக இருக்கும், இது ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.

ஹூண்டாய் ஸ்போர்ட்ஸ் பிளஸ் மாடலை நிறுத்திவிட்டது, மேலும் புதிய மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (O) வகைகளுடன் வழங்கப்படும். புதிய i20 போலார் ஒயிட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, ஃபியரி ரெட், ஸ்டாரி நைட், மெட்டாலிக் காப்பர் உள்ளிட்ட மொத்தம் ஆறு ஒற்றை மற்றும் இரண்டு இரட்டை தொனி விருப்பங்களில் கிடைக்கும். போலார் ஒயிட் மற்றும் ஃபியரி ரெட் ஒரு விருப்ப கருப்பு கூரை வண்ண திட்டத்துடன் வழங்கப்படும்.

Views: - 41

0

0