ரூ.9.29 லட்சம் மதிப்பில் புதிய Triumph Bonneville T100 இந்தியாவில் அறிமுகம்

1 April 2021, 6:20 pm
New Triumph Bonneville T100 launched in India
Quick Share

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய Bonneville T100 பைக்கை இந்தியாவில் ரூ.9.29 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள் சில மெக்கானிக்கல் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் முந்தைய மாடலை விட சுமார் ரூ.41,000 பிரீமியம் விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. 2021 Bonneville T100 இப்போது 41 மிமீ கார்ட்ரிட்ஜ் வகை ஃபோர்க்ஸ் மற்றும் ப்ரெம்போ பிரேக்குகளை முன்பக்கத்தில் பெறுகிறது. ட்ரையம்ப் 900 சிசி, இணை-இரட்டை இன்ஜின் 500 rpm உடன் 64.1 bpm மற்றும் 80 Nm திருப்புவிசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

மேலும், புதிய Triumph Bonneville T100 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பிளாக்-அவுட் இன்ஜின் கவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட அமைப்பைப் பெறுகிறது. அது மட்டுமல்லாது Bonneville T100 இன் எடையில் இருந்து நான்கு கிலோகிராம் குறைக்கப்பட்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, பைக் மாறக்கூடிய இழுவைக் கட்டுப்பாடு, இரட்டை சேனல் ஏபிஎஸ், டார்க்-அசிஸ்ட் கிளட்ச் மற்றும் யூ.எஸ்.பி சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ட்ரையம்ப் புதிய Bonneville T100 ஐ மூன்று வண்ணங்களில் வழங்குகிறது – ஜெட் பிளாக், கார்னிவல் ரெட் வித் ஃப்யூஷன் ஒயிட், மற்றும் லூசர்ன் ப்ளூ ஃபியூஷன் ஒயிட். 

மேலும் என்னவென்றால், நிறுவனம் 16,000 கி.மீ பயணித்திற்கு பிறகு சர்வீஸ் செய்தால் போதுமென்று தெரிவித்துள்ளது. முன்பதிவுகள் ஆரம்பித்துள்ள நிலையில், ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் வரும் வாரங்களில் 2021 Bonneville T100 இன் விநியோகங்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Views: - 1

0

0