2021 ஆண்டில் மூன்றாவது முறையாக நிசான் மேக்னைட் விலைகள் உயர்வு!

14 April 2021, 1:59 pm
Nissan Magnite Prices Hiked
Quick Share

நிசான் நிறுவனம் இந்திய சந்தையில் மேக்னைட் காரின் விலையை அதிகரித்துள்ளது. நிசான் மேக்னைட் கார்களின் விலைகள் ரூ.33,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் நிசான் இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவியின் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது.

நிசான் மேக்னைட் 2020 டிசம்பரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான உடனே இந்தியாவில் நிசான் பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் மாடலாக மாறியது. பலதரப்பட்ட அம்சங்களுடன் நிரம்பியிருக்கும் இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி-யை பலரும் விரும்பினர. இது பெட்ரோல் இன்ஜின் அல்லது டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும், இதன் விலையும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. விலைகள் ரூ.4.99 லட்சம் முதல் தொடங்கி ரூ.9.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டது, இந்த பிரிவில் கிட்டத்தட்ட அனைத்து வாங்குபவர்களின் பட்ஜெட்டையும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததால் இந்த மாடல் நல்ல  வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், நிசான் அதன் பின்னர் மேக்னைட்டின் விலையை பல மடங்கு அதிகரித்தது. முதல் விலை உயர்வு 2021 ஜனவரியிலும், இரண்டாவது விலை 2021 மார்ச் மாதத்திலும் வந்தது. இதையடுத்து இதன் ஆரம்ப விலை ரூ.5.49 லட்சம் ஆக மாறியது. இப்போது, ​​இந்த பிராண்ட் மீண்டும் விலைகளை உயர்த்தியுள்ளது, மேலும் இந்த நேரத்தில் விலைகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

அடிப்படை XE வேரியண்டில் மிகக் குறைந்த விலை உயர்வாக ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. XL மற்றும் XV DT வகைகளில் அதிகபட்சமாக ரூ.33,000 விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து அடிப்படை XE வேரியண்டிற்கான விலை ரூ.5.59 லட்சம் ஆகவும் மற்றும் XV பிரீமியம் CVT டூயல்-டோன் மாடலின் விலை ரூ.9.9 லட்சம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிசான் சப்-காம்பாக்ட் SUVயின் இயந்திர அமைப்புகளில் புதுப்பிப்புகள் எதுவும் இல்லை, மேலும் புதிய அம்சங்களையும் பெறவில்லை. வாங்குபவர்கள் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் இடையே ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

Views: - 29

0

0