ரூ.2,499 விலையில் நாய்ஸ் ஏர் பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் | முழு விவரம் இங்கே

3 November 2020, 5:55 pm
Noise Air Buds come with 13mm dynamic drive size, Bluetooth 5.0, an earbud capacity of 45mAh and case battery capacity of 500mAh.
Quick Share

நாய்ஸ் இன்று அதன் வயர்லெஸ் இயர்பட்ஸின் புதிய தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான்  நாய்ஸ் ஏர் பட்ஸ் (Noise Air Buds). இதன் விலை இந்தியாவில் ரூ.2499 ஆகும். இந்த சாதனத்தை பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது அமேசானிலிருந்து வாங்கலாம்.

பளபளப்பான பூச்சுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஏர் பட்ஸ் 13 மிமீ டைனமிக் டிரைவ் அளவு, புளூடூத் 5.0, இயர்பட்ஸ் 45 mAh திறன் மற்றும் 500 mAh கேஸ் பேட்டரி திறன் ஆகியவற்றுடன் வருகிறது. இயர்பட்ஸ் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது மற்றும் டைப்-C சார்ஜிங் கேஸுடன் வருகிறது.

ஹேண்ட்ஸ்ஃப்ரீ இயர்பட்ஸ் 4.5 கிராம் எடைக்கொண்டது மற்றும் உடற்பயிற்சிகளுக்கும் ஜிம் பயிற்சியின் போது பயன்படுத்துவதற்கு ஏற்ற IPX 4 வியர்வை எதிர்ப்பைக் கொண்டுள்ளது. 1.2 மணிநேர சார்ஜிங் நேரத்துடன், முழு-தொடுதல் கட்டுப்பாட்டுடனான இயர்பட்ஸ் தடையின்றி அதிக நேரம் பார்க்க / இசைக்காக 20 மணிநேர நீண்ட இயக்க நேரத்தை வழங்குகிறது.

நாய்ஸ் பிராண்டின் 13 மிமீ டைனமிக் டிரைவர்ஸ் ஒற்றை தொடுதலுடன் வயர்லெஸ் இயர்பட்ஸ்க்கு கூடுதல் கட்டுப்பாட்டுடன் சிறந்த அழைப்பு தரத்தை வழங்குகின்றன. மேலும், கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் சிரி போன்ற மெய்நிகர் வாய்ஸ் அசிஸ்டன்ட்டுக்கான ஆதரவையும் வழங்குகின்றன. புளூடூத் 5.0 நிலையான இணைப்பு, சிறந்த வயர்லெஸ் வரம்பு மற்றும் சூப்பர் விரைவான இணைப்பை உறுதி செய்கிறது.

Views: - 47

0

0