14 மணிநேர பேட்டரி லைஃப் உடன் நாய்ஸ் பட்ஸ் VS102 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது | விலை இவ்ளோ கம்மியா?

Author: Hemalatha Ramkumar
17 August 2021, 3:39 pm
Noise Buds VS102 TWS earbuds launched in India
Quick Share

நாய்ஸ் பிராண்ட் ஒரு இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. சமீப காலமாக நாய்ஸ் பிராண்ட் பல  இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து வருகிறது. 

 • அதன் TWS போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் நோக்கில், நாய்ஸ் இந்தியாவில் பட்ஸ் VS102 என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 • இந்த நாய்ஸ் பட்ஸ் VS102 ஒரு சிறந்த வடிவமைப்பு மற்றும் 11 மிமீ டிரைவர்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணிநேர பேட்டரி லைஃப், நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு போன்ற பல அம்சங்களைக் கொண்ட சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது.
 • நாய்ஸ் பட்ஸ் VS102 இந்தியாவில் ரூ.1299 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 • இயர்பட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது மற்றும் ஃப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும். 
 • இந்த விலை பிரிவில், நாய்ஸ் ஏற்கனவே ஏர் பட்ஸ் மினியை வழங்குகிறது. 
 • இதே விலைப்பிரிவில் போல்ட் ஆடியோ ஃப்ரீபாட்ஸ் ப்ரோ, மைக்ரோமேக்ஸ் ஏர்ஃபங்க் 1 இயர்பட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலையும் ரூ.1299 தான். 

நாய்ஸ் பட்ஸ் VS102 அம்சங்கள்

 • இந்த நாய்ஸ் பட்ஸ் VS102 தெளிவான மற்றும் உயர்ந்த ஒலி தரத்தை உருவாக்க 11 மிமீ டிரைவர்களைக் கொண்டுள்ளது. 
 • நீர் மற்றும் வியர்வை எதிர்ப்புக்காக இயர்பட்ஸ் IPX5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. நீங்கள் குளிக்கும்போது அல்லது ஜிம்மில் வியர்க்கும் போதும் கூட இந்த இயர்பட்ஸை அணியலாம்.
 • நாய்ஸ் பட்ஸ் VS103 ஆனது Apple AirPods Pro போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் பளபளப்பான கோட்டிங் கொண்டது. 
 • இருப்பினும், இது காதுகளில் சரியான பொருத்தத்தை வழங்க இயர்டிப்ஸ் கொண்டுள்ளது, இது நீங்கள் வேலை செய்யும் போது கூட விழாமல் இருக்க உதவும். 
 • கூடுதலாக, பயனர்கள் ஒரு பாடலில் இருந்து இன்னொரு பாடலுக்கு செல்ல அல்லது இசையை இயக்க அல்லது இடைநிறுத்த உதவும் தொடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன. 
 • இயர்பட்ஸ் iOS மற்றும் Android சாதனங்களுடன் இணக்கமானது.

Views: - 404

0

0