சுமார் ரூ.3500 விலையில் Nokia 6310 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியிருக்கு | அதோடு C30 மாடலும்…! | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
28 July 2021, 1:57 pm
Nokia C30 and Nokia 6310 affordable handsets launched in Europe
Quick Share

எச்எம்டி குளோபல் ஐரோப்பாவில் C30 மற்றும் 6310 ஆகிய இரண்டு புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா C30 என்பது நுழைவு நிலை அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை கொண்ட ஆண்ட்ராய்டு 11 கோ-பதிப்பு ஸ்மார்ட்போன் ஆகும். நோக்கியா 6310 கீர்போர்டுடன் கூடிய 2ஜி வசதியுடனான அம்ச தொலைபேசியாகும்.

இவற்றின் விலை முறையே €99 (சுமார் ரூ.8,700) மற்றும் €40 (தோராயமாக ரூ.3,500) ஆகும். 

நோக்கியா C30 ஒரு வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மறுபுறம், நோக்கியா 6310 போன் கீபோர்டு மற்றும் வளைந்த பின் பேனலுடன் சாக்லேட் பார் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

நோக்கியா C30 ஸ்மார்ட்போன் 6.82 அங்குல HD+ (720×1600 பிக்சல்கள்) LCD திரையுடனும், நோக்கியா 6310 ஸ்மார்ட்போன் 2.4 அங்குல QVGA (240×320 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

நோக்கியா C30 இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் 13 MP முதன்மை சென்சார் மற்றும் 2 MP டெப்த் லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில், 5MP செல்ஃபி கேமரா உள்ளது. நோக்கியா 6310 0.3MP VGA கேமராவை பின்புறத்தில் LED ப்ளாஷ் உடன் கொண்டுள்ளது.

நோக்கியா C30 ஆக்டா கோர் சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெறுகிறது மற்றும் 6000 mAh பேட்டரியை 10W வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் கொண்டுள்ளது.

நோக்கியா 6310 UniSoC 6531F செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 1,150 mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 19.45 மணிநேர டாக்டைமை வழங்குகிறது.

அவை முறையே Android 11 Go மற்றும் Series 30+ OS இல் இயங்குகின்றன, மேலும் Wi-Fi, புளூடூத், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் மற்றும் ஹெட்போன் ஜேக் ஆகியவற்றை ஆதரிக்கின்றன.

நோக்கியா C30 போனின் ஆரம்ப விலை €99 (சுமார் ரூ.8,700) ஆகவும், நோக்கியா 6310 போனின் விலை €40 (தோராயமாக ரூ.3,500) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கின்றன.

Views: - 132

0

0